தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜனவரி, 2017

உங்கள் உள்ளங்கையின் நிறம் இதுவா? அப்ப உங்க குணமும் இது தான்..!


ஒருவரின் உள்ளங்கையைப் பொறுத்தவரை வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் இது போன்ற பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது.
அப்படி இருக்கும் ஒருவருடைய உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து, அவர்களுடைய குணாதிசயங்களை பற்றி கூறிவிடலாம்.
ஆழ்ந்த சிவப்பு உள்ளங்கை
உள்ளங்கை ஆழ்ந்த சிவப்பு நிறத்தை உடையவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் கடுமையான சுபாவம் மற்றும் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், சுய நலத்துக்காக எதையும் செய்பவராகவும் இருப்பார்கள்.
சிவப்பு நிற உள்ளங்கை
குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறம் கொண்ட உள்ளங்கையை உடையவர்கள், அதிக கோபம் உடையவராக இருந்தாலும், அதிக பாசம் மிக்கவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் தான் நினைத்ததை முடிக்கும் திறன் மிக்க அவசரக்காரர்களாக, நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள் என்ற குணத்தில் இருப்பார்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை
ரோஜா இதழைப் போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளங்கையை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள்.
மேலும் இவர்கள் நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவராகவும், அனைவராலும் விரும்பப்படும் நம்பிக்கை மிக்கவராக இருப்பார்கள்.
மஞ்சள் நிற உள்ளங்கை
மஞ்சள் நிறம் கொண்ட உள்ளங்கையை உடையவர்கள், ஆரோக்கியம் குறைவாகவும், பயம் மற்றும் பீதி உள்ளவராகவும், மனோபலம் இல்லாத பலவீனமானவர்கள் மற்றும் அறிவாற்றல் குறைந்த சோம்பேறிகளாகவும், தன்னம்பிக்கை இல்லாமல் எவரையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் வாழ்வில் அதிகப்படியான தோல்வியும் துயரமும் அனுபவிப்பவராக இருப்பார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170121124427#sthash.7b5ON2ez.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக