மேலும் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நம்மை தொடராமல் இருப்பதற்கு, ஆன்மீக பழக்கவழக்கத்தில் இருக்கும் ஐதீகங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கார்த்திகை மாதத்தின் ஐதீகங்கள்
- திருவண்ணாமலை மகா தீபத்தை பார்த்தால், அவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.
- கார்த்திகை மாதம், பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வந்து நமது வீட்டிற்குள் வைத்தால், தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- கார்த்திகை மாதத்தில், சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும் என்பதால், கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் ஆகியவை செய்தால் நமது வீட்டில் செல்வம் சேரும்.
- கார்த்திகை மாதத்தில், அதிகாலையில் எழுந்து நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மேலும் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
- கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
- கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பின் வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பின் வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
- தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக