தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 டிசம்பர், 2016

வேற்றுக்கிரக வாசிகள் யார்? மறைக்கப்படும் ஆதாரம்..! - சிக்கிய பறக்கும் தட்டினால் வியப்பில் விஞ்ஞானிகள்..!


அண்மையில் பிரேசில் நாட்டு ஜெட் வகை விமானங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பயணித்த ஓர் மர்மப் பொருளை பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் ஆய்வாளர்கள்.
அதில் இருந்து வெளியான முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்தோடு மிகப்பெரிய கேள்விகளையும் உண்டாக்கியுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த மர்மப்பொருள் ஓர் பறக்கும் தட்டு வடிவிலான விமானம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வாறு செய்திகள் வெளிவருகின்றன இதில் என்ன வியப்பு என்று எண்ணி விடல் ஆகாது.
பண்டைய கால சித்தர்கள் அதாவது ஆதி தமிழர்கள் ஏற்கனவே விமானத்தையும் பறக்கும் தட்டுகளையும் உருவாக்கி விட்டார்கள் என வரலாற்று ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
அவ்வாறான சித்தர்களின் விமானத்தினை போலவே பிரேசில் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த பறக்கும் தட்டு காணப்பட்டது தான் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விடயத்தின் காரணமாக பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் என்றெல்லாம் கூறப்படுகின்றவர்கள் உண்மையில் யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் ஆய்வாளர்கள்.
உண்மையில் வேற்றுக்கிரக வாசிகள் தான் பறக்கும் தட்டுகளில் வருகின்றார்கள் என்றால், இப்போது மனிதர்கள் கடவுள்களாக வர்ணிக்கப்படுகின்றவர்களுக்கு சக்தி கிடைத்தது வேற்றுக்கிரகவாசிகள் மூலமாக இருக்கலாம் என்ற பதிலையும் விஞ்ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
இந்த வகையில் அவ்வாறான வேற்றுக்கிரக வாசிகளே பண்டைய கால மனிதர்களுக்கு தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.
அப்படி என்றால் இப்போது ஏன் அவர்கள் தெரிவதில்லை? இப்போது ஏன் தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்க வில்லை? கடவுள்கள் மனிதர்களா என்ற பல கேள்விகள் எழுகின்றன.
இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் போது மனிதர்களின் கட்டுபாடுகள் சிதைந்து விடும், கட்டுப்பாடுகள் அற்ற ஓர் நாகரீகம் ஏற்பட்டு விடும் என்பதற்காக இதனைப்பற்றி இரகசியங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.
என்றாலும் வெகுநாள் மறைக்க முடியாது கூடிய விரைவில் அதற்கான பதில்கள் கிடைக்கும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கின்றது.,


ஒருவகையில் மர்மம் எப்போது மர்மமாகவே இருந்தால் மட்டுமே மனித குலம் நீடித்து இருக்கும் என்பதிலும் உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது.

http://www.tamilwin.com/world/01/128807

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக