இதன் மொத்த பரப்பளவே 44 எக்டேர், (108.7 ஏக்கர், 0.44சதுர கி.மீ). இதனால் உலகின் மிகச்சிறிய நாடு இதுவாகும்.
உலக வரைபடத்தில் இலங்கை ஒரு புள்ளியாகவே காணப்படும். ஆனால் அந்த புள்ளியளவு கூட தென்படாத நாடு சில இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் வத்திக்கானும் ஒன்று.
கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.
இதன் மொத்த மக்கள் தொகை 2009இல் கணக்கிடப்பட்டபோது 826 பேர் மட்மே என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
இதை பரிசுத்த நகரம் என்று அழைப்பார்கள். இந்த நாட்டின் தலைவர் பாப்பாண்டவர் ஆவார்.
இந்த சிறிய நாட்டில் தான் உலகிலேயே மிகப்பெரிய தேவாலயமான புனித பேதுரு பஸிலிக்கா தேவாலயம் காணப்படுகின்றது. இது ஒரு அதிசயமாகவே அனைவர் மத்தியிலும் பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக