பொதுவாக ஆண்களின் இந்த அழகான தாடியின் மூலம் தான் பெண்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
ஒருசில ஆண்களுக்கு, அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் தாடி மாதிரி அழகாக தாடி வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால் சில ஆண்களின் தாடியானது அவர்களின் இளம் வயதிலேயே நரை முடியாக காணப்படும்.
இதனால் அவர்கள் எந்த ஸ்டைலில் தாடி வைத்தாலும், அதில் நரை முடியின் ஒரு குறைபாடு இருக்கும்.
எனவே ஆண்களின் வெள்ளைத் தாடியை, கருமையாக மற்றும் அடர்த்தியாக மாற்றுவதற்கு, இதோ சூப்பரான டிப்ஸ்!
ஆண்கள் தாடியின் வெண்மை நிறம் கருமையாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து, அதை 3 நிமிடம் கொதிக்க வைத்து, குளிரச் செய்ய வேண்டும். பின் அந்த எண்ணெய்யை எடுத்து தாடியை 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
- சிறிதளவு கறிவேப்பிலையை எடுத்து, 100 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அதை குளிரவைத்து தினமும் இந்த நீரை குடித்து வர வேண்டும். இதனால் கருமையான மற்றும் அடர்த்தியான தாடி கிடைக்கும்.
- கறிவேப்பிலையை சிறிதளவு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய்யை வைத்து தினமும் 5 நிமிடம் தாடியை மசாஜ் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- நீரில் 100மி.லி கறிவேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, இறக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நிலையில் அதை தினமும் குடித்து வந்தால், நரை முடி விரைவில் மறைந்து விடும்.
- பசுவின் சுத்தமான வெண்ணெயைக் கொண்டு தினமும் 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 30 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், நரைத்த தாடியானது, அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
- பசுவின் வெண்ணெய் மற்றும் கற்றாழையின் ஜெல்லை சம அளவில் எடுத்து, தாடியின் மீது மேலும், கீழுமாக 5 நிமிடம் வரை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் மோர் மற்றும் கறிவேப்பிலையின் சாற்றைக் கலந்து, குறைவான தீயில் 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் குளிர்ந்ததும் அதை எடுத்து தாடியில் மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக