தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 டிசம்பர், 2016

குறைவாக வேலை செய்ய அதிகம் சம்பளம் வழங்கும் நாடுகள் எவை தெரியுமா..?


உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் மக்களுக்கு தொழில் வழங்கும் போது அவர்களின் மன நிலைமை, ஓய்வு மற்றும் சம்பளம் தொடர்பில் அதிகாரிகள் விசேட அவதானத்தை செலுத்துகின்றனர்.

இதன் காரணமாக அந்த நாடுகளின் மக்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளை விடவும் குறைந்த அளவிலான நேரத்திற்கு மாத்திரமே தொழில் ஈடுபடுகின்றனர்.

அதற்கமைய வளர்ச்சியடையாத நாடுகளில் நபர்கள் வருடத்திற்கு வேலை செய்யும் இடத்தில் செலவிடும் நேரத்தை விடவும் குறைவான நேரமே குறித்த நாடுகளின் மக்கள் தொழில் ஈடுபடுகின்றனர்.

எனினும் அவர்களுக்கு வளர்ச்சியடையாத நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமான சம்பளமே வழங்கப்படுகின்றது.

உதாரணமாக இலங்கை போன்ற நாடுகளில் சாதாரண நபர்கள் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 2000 மணித்தியாலங்கள் செலவிடுகின்றனர். எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் அந்த நிலைமை எவ்வாறு என பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

10. சுவீடன் - 1,141 மணித்தியாலங்களே வருடத்திற்கு சேவை செய்ய வேண்டும்.

09. நோர்வே - 1,116 மணித்தியாலங்கள்

08. ஸ்பெய்ன் - 1,089 மணித்தியாலங்கள்

07. நெதர்லாந்து - 1,081 மணித்தியாலங்கள்

06. ஹங்கேரியா - 1,061 மணித்தியாலங்கள்

05.ஜேர்மன் - 1,053 மணித்தியாலங்கள்

04. போலந்து - 1,038 மணித்தியாலங்கள்

03. பெல்ஜியம் - 1,011 மணித்தியாலங்கள்

02. பிரான்ஸ் - 1,007 மணித்தியாலங்கள்

01. இத்தாலி - 960 மணித்தியாலங்கள் மாத்திரமே தொழில் செய்ய வேண்டும். இது வாரத்திற்கு 20 மணித்தியாலங்களுக்கும் குறைவான காலப்பகுதியாகும்.
14 Dec 2016
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1481705354&archive=&start_from=&ucat=1&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக