தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, December 13, 2016

என்ன செஞ்சாலும் முகம் வறண்டு எரிச்சல் தருகிறதா? இதை முயற்சி(ட்ரை) பண்ணிட்டு அப்பறம் சொல்லுங்க....

சருமம் என்ன செய்தாலும் வறண்டு போய்விடும் இந்த குளிர்காலத்தில். குறிப்பாக கை, கால் சுருக்கமடைந்து எரியும். இதற்கு எத்தனை தடவைதான் மாய்ஸ்ரைஸர் உபயோகப்படுத்துவது என அலுத்துக் கொள்கிறீர்களா?.

கடைகளில் விற்கும் க்ரீம் தற்போதைக்கு ஆறுதல் அளித்தாலும் அதிலுள்ள ரசாயனங்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் ரெசிபி ட்ரை பண்ணுங்க. பிறகு சொல்லுங்க.
தேவையானவை: சுத்தமான தேங்காய் எண்ணெய் - கால் கப், கோகோ பட்டர் - முக்கால் கப், ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன், வாசனை எண்ணெய் - சில துளிகள்.
வறண்ட சருமத்தில் செயல் புரியும்: சுத்தமான தேங்காய் எண்ணெய் உறையும் இது உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை தரும். கோகோ பட்டர் சரும செல்களுக்கு போஷாக்கும், ஆலிவ் எண்ணெய் பொலிவையும் தரும். வாசனை எண்ணெய் பாதாம், லாவெண்டர் என ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
செய்முறை: முதலில் எல்லாவ்ற்றையும் ஒன்றாக கலந்து லேசாக சூடுபடுத்துங்கள். பிறகு ஆற வைத்து அந்த எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
பலன்: தினமும் காலை மாலை என இரு வேளை தடவினால் அன்று முழுவதும் சருமம் வறட்சி அடையாமல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.
- See more at: http://www.manithan.com/news/20161213123444#sthash.lHqUFK5J.dpuf

No comments:

Post a Comment