தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, December 25, 2016

வரலாற்று பார்வையில் இன்று! யாழில் கிறிஸ்மஸ் இரவுக்காக கூடியிருந்த 300 பேருக்கு நடந்த சோகம்!

டிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
1777 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1914 - முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924 - அல்பேனியா குடியரசாகியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.
1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
1953 - நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
1954 - லாவோஸ் விடுதலை பெற்றது.
1966 - தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1974 - ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1979 - ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
2005 - யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்

No comments:

Post a Comment