அந்த வகையில் விடை கொடுக்க முடியாத மர்மங்கள் பல பூமி முழுதும் சிதறிக்கிடக்கின்றன. அவ்வாறானதொரு மர்மமே அமெரிக்கவாவில் கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கு எனப்படும் இடம்.
இந்த பள்ளத்தாக்கு மிகக்கடினமான நிலப்பரப்பை கொண்டது. ஆனாலும் இந்த இடத்தில் கற்கள் தானாக ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்ந்து செல்கின்றது.
நம்ப முடியாத ஒன்றுதான் ஒரு கல் நகர்ந்தால் ஆச்சரியம் இல்லை குறித்த பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கற்கள் தனது போக்கிற்கு ஏற்ப இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் வெவ்வேறு திசையில்.
இதற்கான விடையை கண்டு பிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் ஊகங்களின் அடிப்படையிலேயே இதுவரையில் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறித்த பள்ளத்தாக்கில் அமானுஷ்ய சக்திகள் நடமாடுவதாகவும், அந்தவகை அமானுஷ்ச சக்திகளால் இந்தச் செயல் நடைபெறுகின்றது எனவும் ஒரு சிலர் தெரிவித்தாலும் உண்மைத் தன்மையினை கண்டுபிடிக்கவில்லை.
1948ஆம் ஆண்டே இந்த பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வதை முதன்முறையாக கண்டுபிடித்தனர்.
அப்போது முதல் இது மர்மமே. அண்மைக்காலம் வரை இது தொடர்பிலான ஆய்வுகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.
அது மட்டும் அல்ல 300, 400 கிலோ கிராம்களுக்கு அதிகமான நிறை கொண்ட பாறைகள் கூட இந்த பள்ளத்தாக்கில் தானாக நடை பவனி செய்வது ஆச்சரியமான விடயம்.
இரவு நேரத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவும், பகல் நேரத்தில் அதுஉருகி தண்ணீராகவும் பெருக்கெடுக்கிறது. இதுவும் பாறை நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் என ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்ற போதும்,
எந்த விதமான உந்து விசையும் இன்றி தானாக பாறைகள் இடம்பெயர்வதற்கு சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகின்றது.
நகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் (Sailing stones) என இவை அழைக்கப்படுகின்றது.
பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும்.
இத்தகைய சம்பவங்கள் ரேஸ்ட்ராக் பிளாயா, சாவுப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.
என்றாலும் அறிவியலையும் புவியீர்ப்பு விசையையும் கூட எதிர்த்து செயற்படும் பாறைகளுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கின்றது? இந்தக் கேள்விக்கு இன்று வரை விடையில்லை.
இவ்வாறான பாறைகளின் நகர்வுக்கு காரணம் இதுவரையில் கண்டு பிடிக்க முடியாததால் ஆவிகளின் அட்டகாசமான இவை இருக்கலாம் என்ற அச்சமும் புரளியும் கூட ஒரு சிலர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக