என்ன வியப்பாக உள்ளதா? நடுகடலுக்கு கப்பலில் செல்லலாம், படகில் செல்லாம் எவ்வாறு நடந்து செல்வது என்றா யோசிக்கிறீர்கள்?
இந்த அதிசய கோவிலும், அதிசய வழிபாடும் குஜராத் பாவ் நகர் மாவட்டத்திலேயே நடைப்பெற்று வருகிறது.
சாதாரணமாக ஒருவர் பாவ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோலியாக் கடலினை நோக்கும் போது வெறுமனே தூணொன்றும் கம்பமுமே கண்ணுக்கு புலப்படுகிறது.
இந்த விடயத்தினை பற்றி அறியாத ஒருவர் அங்கு சென்றால் கடலின் நடுவில் என்ன தூண் இருக்கிறது என்று தான் கேட்பார்கள்.
ஆனால் அந்த தூண் நிற்கும் இடத்தில் கோவிலொன்று அமைந்துள்ளது வியப்பே. இந்த கோவில் பாண்டவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக அனைவராலும் கூறப்படுகிறது.
பாண்டவர் யுத்தத்தின் போது உயிரினங்களை கொன்றதால் பெறும் கலக்கத்தில் இருந்துள்ளார்கள்.
இந்த கலக்கத்தை நீக்குவதற்காக ஒரு கறுப்பு நிற கொடியையும், கறுப்பு நிற பசுவையும் கொடுத்த கிருஷ்ணன், கால் நடையாக நடந்து செல்லும் போது எந்த இடத்தில் இந்த கறுப்பு கொடியும், கறுப்பு பசுவும் வெண்மை நிறமாக மாறுகிறதோ, அந்த இடத்தில் சிவனை தியானம் செய்யுங்கள் உங்கள் பாவங்கள் மறையும் என கூறியுள்ளார்.
பாண்டவர்கள் கோலியாக் நகர் கடற்கரை பகுதியில் வந்ததும் அவர்கள் கையில் இருந்த கறுப்பு கொடியும், அவர்கள் அழைத்து வந்த கறுப்பு நிற பசுவும் வெண்மை நிறத்திற்கு மாறியது.
இதனால் பாண்டவர்கள், அதே இடத்தில் சிவனை நினைத்து தவம் செய்யத் தொடங்கினர். பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தனர்.
இதன் பிரதிபலனாக ஐந்து சுயம்பு லிங்கமாக இறைவன் தோன்றியதாகவும், அதனால் இதே இடத்தில் பாண்டவர்கள் கோவில் அமைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாண்டவர்களின் கலங்கத்தினை துடைத்த இவ்விடத்திலுள்ள சிவனுக்கு இதனாலேயே நிஷ்காலங்க் மகாதேவர் எனும் பெயர் வந்ததாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையொன்று நிலவுகிறது.
இந்த கோவிலினை தரிசிப்பதற்காக அங்கு வரும் பக்தர்கள் நடுக்கடலுக்கு நடந்து செல்கிறார்கள்.
காரணம் இந்த கடலில் உள்ள நீர் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரப்பகுதியில் உள்வாங்கப்படுவதே இந்த ஆச்சர்யம் நிகழ்வதற்கான சாத்தியத்தினை ஏற்படுத்துகிறது.
இதனடிப்படையில் இங்கு வழிபாட்டிற்காக வரும் மக்கள் நீர் உள்வாங்கப்பட்டதும் சிவலிங்கத்தினை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.
மேலும் நீர் உள்வாங்கப்பட்டதும் கோவில் முழுமையாக வெளியே தெரிகின்றமை குறிப்பிடத்தக்க அதிசயமாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக