தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 டிசம்பர், 2016

4 திருமணம் 10 பிள்ளைகள்! அய்யோ பாவம் பெண்களால் சார்லி சாப்ளின்னுக்கு ஏமாற்றம்!

பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக்கிய சார்லி சாப்ளினை தெரியாதோர் இருக்க முடியாது. சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றால் நம்ப முடிகிறதா?
சிறு வயது முதல் கஷ்டங்களை கடந்தே வந்த இவர் பெண்களால் இல்வாழ்க்கையில் சில ஏமாற்றங்களை சந்தித்தார். இதன் விளைவு தான் இவர்க்கு நடந்த 4 திருமணங்கள்.

முதல் திருமணம்

மில்ட்ரெட் ஹாரிஸ் என்னும் பெண்ணனை 1918 ல் தனக்கு 16 வயது இருக்கும் போது மணந்தார், இத்தம்பதிக்கு குழந்தை பிறந்ததும் இறந்தது முதல் சோகம். வாழ்க்கை கசந்ததோ என்னவோ இவர்களுக்கு இரண்டே வருடத்தில் விவாகரத்து ஆனது.

இரண்டாம் திருமணம்

லீடா க்ரே என்பவர் மீது இவருக்கு காதல் வந்தது.1924 ல் இவர்களுக்கு திருமணம். அப்போது 35 வயதான சார்லிக்கு இரண்டாம் திருமணம் நடந்த போது அப்பெண் கர்ப்பமாக இருந்தாராம்.
இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தது. இந்த வாழ்க்கையும் விவாகரத்தில் தான் முடிந்தது. இதுவும் அவருக்கு நடந்த ஏமாற்றம்.

ரகசிய உறவு, பொய் வழக்கு, நிரபராதிக்கு தண்டனை

சார்லிக்கு இது கேட்ட நேரம் போல. அவருக்கு பல பிரச்சனைகள். அவரின்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில அந்தரங்க விஷயங்களும் வெளியே வந்தன.
பின் 1936 ல் பால்ட் கொடார்ட் என்பவரை 47 வயதில் செய்த ரகசிய திருமணமும் விவாகரத்தில் முடிய நடிகை ஜான் பேரியுடன் ரகசிய உறவு தொடர்ந்தது.
பேரியால் சில மனஅழுத்தத்தை சந்தித்த அவர் பின் இவரிடமிருந்து விலகிப்போனார். பேரி தன்னுடைய குழந்தைக்கு அப்பா சார்லி என 1943 ல் வழக்கு தொடர பிரச்சனை பெரிதானது.
உண்மை அதுவல்ல. சில உண்மை ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
ஆனால் அக்குழுந்தையின் வயது 21 ஆகும் வரை வாரம் 75 டாலர்கள் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டது.
சார்லி குற்றமற்றவராயினும் இத்தண்டனையை அனுபவித்தார்.

4 ம் திருமணம் , எட்டு குழந்தைகள்

விவாகரத்தே விடாகதையாய் தொடர்ந்த சார்லி சாப்ளின் வாழ்க்கை ஓணா நீல் என்பவரை தன்னுடைய 54 வயதில் திருமணம் செய்ய வைத்தது. இது இவருக்கு பலவருடங்கள் மகிழ்ச்சியை தந்தது.
1943 இது நடந்தேற இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. இவரது வாழ்வில் இதுவே கடைசி திருமணம்.
பல இன்னல்களை சந்தித்த இவர் முதுமையில் சில காலங்கள் சந்தோசமாக வாழமுடிந்தது.

புனித நாளில் மரணம்

பின் சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 வயதில் காலமானார். இவரது உடலை ஸ்விஸ்சர்லாந்து வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்துள்ளார்கள்.
கடைசி வரை கஷ்டத்தை பார்த்தாலோ இல்லை தன் துன்பத்திலும் மற்றவர்களை சிரிக்க வைத்ததாலோ என்னவோ போதும் என்று ஆண்டவன் தான் அவதரித்த புனித நாளில் தன்னோடு சார்லி சபினை ஐக்கியமாக்கிக்கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக