தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 டிசம்பர், 2016

இரண்டு நாள் குளிக்கலைன்னா என்னாகும்? இதப்படிங்க ...

ஒருவரின் சுகாதாரம் என்பது ஒருநாளைக்கு இரண்டு முறை குளிப்பது மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும்.
சுத்தமாக இருக்கும் விஷயங்களில், ஒவ்வொருவரும் வேறு வேறு விதங்களில் இருப்பார்கள்.
ஏனெனில் சிலர் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பார்கள், சிலர் ஒரு முறை இன்னும் சிலர் சில நாட்கள் கழித்து குளிப்பார்கள்.
எனவே இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் ஆயிரக்கணக்கான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
குளிக்காமல் நாம் அன்றாடம் செய்யும் செயல்பாடுகளில், இருந்து கதவில் கைப்பிடியில் ஆரம்பித்து, குப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நம்மை அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றது.
குளிக்காமல் இருந்தால் நமது உடலில் பாதிப்புகள் ஏற்படுமா?
  • நமது உடலானது, தன்னிச்சையாக ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை நமது உடம்பில் தீய தாக்கத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.
  • நம் உடலில் அன்றாடம் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க நாம் தினமும் குளிக்க வேண்டும். இதனால் நமது உடலை இயற்கையான முறையில், பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து தடுத்து, வலுப்படுத்தலாம்.
  • நமது முகத்தை தேய்த்து குளிக்கும் போது, பலரும் கண்களை சுற்றி, காதுகளின் இடுக்குகள், மூக்கு போன்ற பகுதியில் மட்டும் கவனமாக தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில் இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கப்படுகிறது.
  • குளிர் காலங்களில், வியர்வை அதிகமாக வரவில்லை என்றால் சிலர் குளிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு இருப்பது முற்றிலும் தவறானது. ஏனெனில் உடலில் வியர்வை சுரக்க வில்லை என்றாலும் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ்களின் தாக்கத்தை எற்படுத்துகிறது.
  • நாம் தினமும் குளிக்கவில்லை என்றால் நம்முடைய சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போல உருவாகி, சருமத்தின் நலனை கெடுக்கிறது. இதனால் சரும தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
  • உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, குளிக்க முடியவில்லை என்றாலும் இதமான நீரை கொண்டு, அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் துடைத்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் இந்த இடங்களில் தான் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக