தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

உங்களின் உயரம் என்ன? அப்போ இது தான் உங்கள் உடல் ஆரோக்கியம்

ஒருவருடைய மரபணுக்கள் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற காரணிகளே அவருடைய உயரத்தை நிர்ணயிக்கிறது.
சில ஆய்வுகளில் ஒருவரது உயரத்தை வைத்து, அவர்களுக்கு வரக்கூடிய உடல்நல பிரச்சனைகளை சொல்ல முடியும் என்று கூறுகிறது.
எனவே ஒருவரின் உயரமானது, அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
உயரமாக மற்றும் குட்டையாக இருப்பவர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்
  • சமீபத்திய ஆய்வில் குட்டையாக இருப்பவர்களை விட உயரமானவர்களுக்கு 25% தான் இதய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் உயரமானவர்களுக்கு, இதயத்தின் ஆரோக்கியம், குட்டையானவர்களை விட சற்று சிறந்ததாக இருக்கும்.
  • புற்றுநோயானது, குட்டையாக இருப்பவர்களை விட உயரமானவர்களுக்கு தான் குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • குட்டையாக இருப்பவர்களின் உடம்பில், ரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் பக்கவாதம் ஏற்படுவதில்லை. ஆனால் உயரமானவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதுடன் பக்கவாதம் வரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
  • உயரமான பெண்களின் கர்ப்ப காலத்தில், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் குறைவு. ஆனால் குட்டையான பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக மன அழுத்தம் போன்ற பிரச்சனைக்கு ஆளாகுவார்கள்.
  • டிமென்ஷியா என்ற ஒருவித ஞாபக மறதி நோயானது, உயரமானவர்களை விட, குட்டையானவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக