இலங்கை மசாலா கலவை ஒன்றை தயாரித்து Illana Smith என்ற பெண் “ஹரி ஹரி” என்ற விருதை பெற்று பிரபல்யம் அடைந்துள்ளார்.
குறித்த பெண் பிரித்தானியாவின் Poole என்ற பகுதியை சேர்ந்தவராவார்.
இலங்கையில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த இந்தப் பெண், உள்ளூர் உணவுகள் மீது தான் காதல் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"தன்னை பொறுத்தவரை, வீட்டில் சமைத்த புதிய உணவு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சின்னமாக இலங்கை கறி காணப்படுகிறது.
ஹரி ஹரி என்பதில் "சரி சரி" என விளக்கங்கள் உள்ளன. இது இலங்கை வெளிப்பாடுதான் எனவும் Illana விளக்கியுள்ளார்.
ஹரி ஹரி என்ற மசாலா, உண்மையான இலங்கை மசாலா கறி பிரியர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். இதனை இந்திய கறியுடன் ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்துவமான சுவை கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கறியில் பயன்படுத்தப்படும் மசாலாவில் சுகாதார நலன்கள் உள்ளதாக சமீபகால ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டின் சுவையான உணவு கலவையை ஹரி ஹரி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக