தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 டிசம்பர், 2016

தினமும் காலையில் கறிவேப்பிலை! இதைப்படித்தால் இனிமே தூக்கி போடவே மாட்டீங்க

உணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம்.
அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள், நாம் இந்த கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ஏராளமான பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
கறிவேப்பிலையில் விட்டமின் A, விட்டமின் B, விட்டமின் B2, விட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை இலையின் மருத்துவ நன்மைகள்
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையின் இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், நமது வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, அழகான இடையைத் தருகிறது.
  • காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது.
  • சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
  • கறிவேப்பிலை, நமது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.
  • அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால், நமது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் அதை காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், கருமையான முடியின் வளர்ச்சி மற்றும் கல்லீரலின் வலிமையை மேம்படுத்துகிறது.
  • ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் இருக்கும் கடுமையான சளித் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக