தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஒருவருக்கு ஏற்படப்போகும் மரணத்தை முன்பே அறியலாம்!

ஜனனம் என்று இருந்தால் மரணம் என்பதும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதீ! பண்டைகால இதிசாசங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ஒருவருக்கு மரணம் நிகழ போகிறதென்றால் சில அறிகுறிகள் தென்படும் என சொல்லப்பட்டுள்ளது.
முக்கிய உடலுறுப்புகளான வாய், காது, கண் செயலிழக்க ஆரம்பித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் என சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சாதரண நிறத்தில் இருக்கும் ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறிவருகிறது என்றால் அதிலிருந்த ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் என கூறப்பட்டுள்ளது.
நாக்கு மற்றும் தொண்டை பகுதிகள் ஒருவருக்கு வறட்சியாகவும் மற்றும் அது அதிகரித்து கொண்டே இருந்தால் அந்த நபர் வெகு விரைவில் உயிழிப்பார் என அர்த்தமாகும்.
ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் என சிவ புராணம் சொல்கிறது.
எந்த ஒரு நபரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை கண்களால் சரியாக பார்க்க முடியவில்லையோ அந்த நபரை எமன் நெருங்கி கொண்டிருக்கிறான் என அர்த்தமாகும்.
கருடன், காகம், புறா யார் தலையில் வந்து அமர்கிறதோ அது அவர்களுக்கான மரண அறிகுறி என்கிறது சிவ புராணம்!
எண்ணெய் மற்றும் தண்ணீரில் ஒரு பிரதிபலிப்பு தோன்றுமல்லவா? அது ஒருவரின் கண்களுக்கு தெரியவில்லை என்றால் அவருக்கு ஆறு மாதத்தில் உயிரழப்பு ஏற்படலாம்.
எந்தவொரு விடயத்தையும், முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக