இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இருப்பதை விட, அனுமானத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகின்றன.
அவ்வாறு பெண்களின் உடல்கள் குறித்த சில தவறான கருத்துக்கள் இதோ
- ஒரு பெண் உறவின் போது உச்சகட்ட நிலையை அடையாவிட்டால் அவர்களால் கருத்தரிக்க இயலாது.
- பிறக்கும் குழந்தைகளின் உடலில் ஏதேனும் அடையாளங்கள்(Birthmarks) இருந்தால், அது தாயின் அதிர்ச்சிகரமான உணர்வுகளின் வெளிப்பாடு என்று ரோமானியர்கள் கருதி வந்தனர். அதாவது, குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் அதிர்ச்சியடைந்தால் பிறக்கும் குழந்தையின் உடலில் சில அடையாளங்கள் ஏற்படும்.
- 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானிய பெண்ணுக்கு Mary Toft என்ற பெண்மணிக்கு, முயல் ஒன்று பிறந்துள்ளது. காரணம் இப்பெண் கர்ப்பமாக இருக்கும்போது முயலை சாப்பிடுவது போன்று கனவு கண்டுள்ளார், இதனால் தான் முயல் வந்து குழந்தையாக பிறந்துள்ளது என்ற கட்டுக்கதைகள் உலாவந்தன.
- பண்டைய காலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்காக பிறக்கவில்லை, மாறாக அவர்கள் குழந்தை பெற்றெடுக்கவே பிறந்துள்ளார்கள் என்ற தவறான கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு காரணம் என்னவெனில், கல்வி கற்ற பெண்களின் கருப்பையான மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் தான் அவர்கள் கல்வி கற்க கூடாது என வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டார்கள். மேலும், 1873 ஆம் ஆண்டு Harvard Medical School பேராசிரியர் Edward Clarke என்பவர் இந்த கருத்தினை முன்வைத்தார். ஆனால் இவரது கருத்தினை ஏற்றுக்கொள்ள இந்த உலகம் மறுத்துவிட்டது.
- 2013 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த Sheikh Saleh Al-Loheidan என்பவர், பெண்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது கருப்பை சேதமடைந்து அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்வது மிககடினம், மேலும் இடுப்பெலும்பு பாதிக்கப்படும் என கூறினார். டுவிட்டரிலும் #WomensDrivingAffectsOvariesAndPelvises என்ற ஹேஷ்டேக் பரவியது. ஆனால் இந்த கருத்து தவறானது என கூறி நிராகரிக்கப்பட்டது.
- மாதவிடாயின் போது பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் குருதி, மோசமானது மற்றும் அசுத்தமானது. எனவே இந்த நேரங்களில் பெண்களை சமையல் செய்யவோ அல்லது வீட்டிற்குள்ளோ அனுமதிக்ககூடாது. அவ்வாறு நடந்தால், சுகாதாரக்கேடுகள் ஏற்படும் எனக்கருதி அன்றைய காலங்களில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக