தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 டிசம்பர், 2016

துரோகம் செய்வதற்கான அறிகுறிகள் இவைதானா ?



திடீரென்று அவர்களுடைய தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது,
...
மனைவியை விமர்சனம் செய்வது, அல்லது எதிர்பாராத பரிசுகள் கொடுப்பது அவன் இன்னொரு காதலில் இருக்கிறான் என்பதைக் காட்டும்.

வழக்கமான வாழ்க்கை முறையில் குறிப்பிடுமளவுக்கு மாற்றம்- அதாவது உங்களிடம் அல்லது குழந்தைகளிடம் அக்கறையின்மை. வேலை மற்றும் பொழுது போக்குகளில் அக்கறை இல்லாமை.

வாழ்க்கையில் சிலிர்ப்பான (thrill) அனுபவம் வேண்டுமென்று சொல்வது.

உங்கள் இருவருக்குமிடையேயான நெருக்கம் குறைதல். அனேகமாக உடல் தொடர்பே இல்லாமை.

தன்மதிப்பு (self-esteem) குறைந்து காணப்படுதல்.

குழப்பத்துடன் காணப்படுதல்.

வீட்டில் இருக்கும்போது சோம்பேறித்தனமாகக் காணப்படுதல்.

எதிர் மறையாகப் பேசுதல் நடந்து கொள்ளுதல்.

அருகில் இருந்து பேசும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.

நீங்கள் அவன்/அவள் செய்யும் துரோகத்தைப் பற்றிப் பேசும்போது தீவிரமாக மறுத்துப் பேசுதல்.

வழக்கத்தை விட விழிப்பு(ணர்வு)டன் இருத்தல்.

பணியிடத்தில் அதிக நேரம் இருத்தல்.

சீராக உடையணிதல், சீரான தோற்றத்திலேயே இருத்தல்.

கடன் அட்டை விவரப்பட்டியல் பல செய்திகளைச் சொல்லும்.

வீட்டில் நடக்கும் விழாக்களில் இருந்து விலகி இருத்தல்.

பல விஷயங்களில் பொய் சொல்வதை நீங்கள் கவனிக்க முடியும்.

பணம் பற்றி உங்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வரும்.

உங்களுடன் சேர்ந்து எங்காவது போவதையோ செய்வதையோ தவிர்த்தல்.

நீங்கள் சண்டை போடும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.

உங்களைத் தவிர்ப்பது கண்கூடாகத் தெரியும்.
ஒதுங்கி இருத்தல்.

பெண்களின் பொட்டு, உதட்டுச் சாயம், முடி போன்ற அடையாளங்கள்.

பால்வினை நோய்கள் போன்ற சோதனைகள் செய்துகொள்ளல்.

மேற்கண்ட அறிகுறிகளில் சில அல்லது பல குறிப்பிடத்தகுந்த அளவு காணப்பட்டால் அது உங்கள் இணையரின் நம்பிக்கை துரோகத்தை உறுதிப் படுத்துவதாகும்.

உண்மையில் இந்தச் செய்தி உங்களுக்குப் பேரிடியாகத்தான் இருக்கும்.

#நம்பிக்கை_துரோகத்தை எப்படி சமாளிப்பது? எப்படி எதிர்கொள்வது?

உடனடியாக திருமண உறவை முறித்துக்கொள்வது போன்ற எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்.

இது உங்கள் திருமண வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம்.

இன்னும் எதிர்காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள், பிரச்சனைகள் இதைவிடப் பெரிதாக இருக்கிறதா என்று பாருங்கள்.

துரோகம் செய்துவிட்ட இணையருடன் இருக்கும்போது கடுங்கோபம், அதிர்ச்சி, நிச்சயமற்ற தன்மை, சண்டை, பயம், அழுகை, மன அழுத்தம், மனக் குழப்பம் போன்ற உணர்ச்சிகள் மாறி மாறி உண்டாவது இயல்பானதுதான் என்று புரிந்துகொள்வது நல்லது.

உங்கள் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள்.

துரோகம் உங்களைப் பாதிக்கும்போது குமட்டல், வயிற்றுப் போக்கு, தூக்கக் குறைபாடு(மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாகத் தூங்குவது) நடுக்கம், கவனக் குறைபாடு, உண்பதில் குறைபாடு போன்ற உடலியல் பிரச்சனைகள் ஏற்படும்.

அவற்றை உரிய முறையில் சரி செய்யுங்கள்.

சரியான நலமளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் அன்றாட வேலைகளைச் சரியான நேரத்தில் செய்யுங்கள், வழக்கமான நேரத்தில் தூங்குங்கள்.

நாள்தோறும் சிறிது நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், சில வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

உங்களை சிரிக்க வைக்கக் கூடிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வலிதரும் துணையை மறந்து வாழ்க்கை போகும் போக்கில் விடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக