இதனால் இரவு நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம்.
இதற்கு தேங்காய் பாலில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த பானத்தை குடித்து வருவதால் ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
- இஞ்சி பவுடர் - 1
- டீஸ்பூன் தேங்காய் பால் - 2 கப்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
- தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் இஞ்சி, தேங்காய் பால், மஞ்சள், மிளகு தூள் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து, குறைவான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்க வேண்டும். பின் அந்த பானத்தில் தேன் கலந்தால் போதும்.
இந்த பானத்தை தினமும் இரவில் தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால், மறுநாள் காலையில் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
பானத்தின் பயன்கள்
- பானத்தில் இஞ்சியை சேர்ப்பதால், இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் நமது உடலில் ஏற்படும் மாதவிடாய் வலிகள், குடலியக்க பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, உயர் கொலஸ்ட்ரால், ஆஸ்டியோபோரோசிஸ், சர்க்கரை நோய், வாந்தி, புற்றுநோய், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
- தேங்காய் பாலில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் உள்ளது. இதனால் இது புரோட்டீன் இழப்பைக் குறைத்து, செரிமான பிரச்சனைகள், திசுக்களின் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
- மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால், மூட்டு வலிகள், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுதல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- பானத்தில் தேன் கலப்பதால், இது தூக்கமின்மை மற்றும் சோர்வு நிலையை போக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக