தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, November 19, 2016

ஆண்களே...நீங்கள் தினமும் செய்யும் தவறு இதுதான்! விந்தணுக்கள் குறைந்துவிடும்

மனிதனின் மாறுபட்ட வாழ்க்கை முறையின் காரணமாக பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மனிதனை நோய்கள் தாக்குவதற்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் ஒழுங்கற்ற உணவு முறைகள் மற்றும் தவறான பழக்கவழக்கங்களும் ஒரு காரணம் ஆகும்.
உதாரணத்திற்கு கருத்தரித்தல் பிரச்சனை. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு இருபாலரும் காரணமாக இருந்தாலும், ஆண்களுக்கு போதிய அளவில் விந்தணுக்கள் இல்லாமல் இருந்தாலும் கருத்தரித்தல் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது.
ஒரு ஆணுக்கு பிறப்பிலேயே விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுவதில்லை, மாறாக அவர்கள் மேற்கொள்ளும் சில தவறான பழக்கவழக்கங்களே இதற்கு காரணமாக அமைக்கிறது.
இதோ ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கு இந்த 6 முக்கிய காரணங்களை பற்றி பார்ப்போம்,
பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பின்போது Bisphenol A என்ற கரிம செயற்கை கலவை கலக்கப்படுகிறது. இந்த கலவையானது ஆண்களின் விந்தணுக்களை குறைக்கிறது.
அதவாது, ஆண்களின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரிக்கின்றபோது, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
செல்போன்
செல்போன்களை ஆண்கள் தங்களது பின்புற பாக்கெட்டில் வைக்கும்போதும் எழுகிற அதிர்வுகள் மற்றும் கதிரியக்கங்கள் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
அதிக வெப்பம்
அதிக வெப்பம் நிறைந்த இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருக்ககூடாது. 4 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் இருந்தால் சரியான அளவில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
உடல் பருமன்
அதிகமான உடல் எடையும் ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கு காரணமாக இருக்கிறது.
புகைத்தல்
புகைபிடித்தல் பழக்கம் இருந்தால் இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
மன அழுத்தம்
ஆண்கள் மன அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சரிசெய்து கொள்வது நல்லது. ஏனெனில் இந்த பிரச்சனை அவர்களின் ஆண்மையை பாதிக்கும்.
ஆல்கஹால்
அளவுக்கதிகமாக ஆல்கஹால் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைக்கிறது.

No comments:

Post a Comment