ஆனால் இந்தக் காலத்தில் ஜாதகம் பார்த்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் நடைமுறையில் நடந்து வருகின்றது.
அந்த வகையில், திருமண பெண்ணிற்கான காமசாஸ்திரம் கூறும் பத்து விதமான லட்சணங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மணப்பெண்களிடம் இருக்க வேண்டிய லட்சணங்கள்
- மணப்பெண்கள் பூமியை போன்று பொறுமை குணமும், பிற்காலத்தில் குழந்தைகளை நன்கு வளர்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- காதல், கருணை, பாசம், என்று அனைத்தும் கலந்து கணவனுடன் நெருக்கமான உறவில் பிணைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
- பெரியவர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்றும், அவர்களின் அறிவுரைகளை ஏற்கும் பண்புகளை பெற்று, குடும்ப நலனுக்காக சுய நலத்தை விட்டுக் கொடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.
- உலகத்தில் நடக்கும் நடப்புகள் குறித்து அறிந்திருக்க வேண்டும், சமூகத்தில் குடும்பத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில் புத்திக்கூர்மை பெற்றிருக்க வேண்டும்.
- குடும்பத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரிடமும் சரிசமமாக நல்ல பண்புகளுடன் பழக தெரிந்திருக்க வேண்டும்.
- சமூக வேலைகளுடன் சேர்த்து, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் பற்றி அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
- குடும்ப வாழ்வில் அனைவரும் நலம் பெற நல்ல அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்கான அறிவுரைகளை கூற வேண்டும்.
- நமது வாழ்க்கையின் போது, கடினமான காலத்தில், ஆணுக்கு பக்கபலமாக இருந்து, அவர்களை அரவணைத்து செல்லும் குணத்தை பெற்றிருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக