தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 6, 2016

தலை முடி கொட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்!

இன்றைய காலத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பலபேர்கள் எவர்சில்வர் பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதை விட பிளாஸ்டிக் பாக்ஸில் தான் அதிகமாக உணவை உட்கொள்கிறார்கள்.
எனவே இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடும் 92 சதவீதம் பேர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் பிஸ்பெனால் ஏ (BPA) என்னும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிளாஸ்டிக் பாக்ஸில் உணவு சாப்பிடும் பலபேர்க்கு அதிகமான முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மைக்ரோ ஓவென் மூலம் உணவை சமைத்து, உணவு சூடாக இருக்கும் போதே பிளாஸ்டிக் பாக்ஸில் வைத்து சாப்பிடுவோர்களுக்கு தைராய்டு பிரச்சனை, வளர்ச்சிதை பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் தலையில் வழுக்கை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே இனிமேல் பிளாஸ்டிக் பாக்ஸில் உணவு வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

No comments:

Post a Comment