நாளடைவில் சுற்றுப்புறச் சூழல், வாழ்வியல் போன்றவற்றில் மூலம் காலங்கள் மாறியதால் மனிதர்களிடமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது.
இந்த காலத்தில் உள்ள மனிதர்களுக்கு கண் இமைகள், புருவம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் மட்டுமே முடிகள் வளர்ந்து பாதுகாப்பாகவும், மறைமுகமாகவும் இருக்கிறது.
ஆனால் சில பேர்கள் சமீப காலமாக அழகு என்ற பெயரில் அந்த இடங்களில் இருக்கும் முடிகளை அகற்றி விடுகிறார்கள்.
சராசரியாக ஒரு மனிதரின் தலையில் 1,30,000 முடிகள் இருக்கிறது. இதில் 93% சதவீதம் வளர்ந்து கொண்டிருக்கும் முடிகளின் எண்ணிக்கையாகும். மேலும் ஒரு நாளைக்கு நூறு முடிகள் உதிர்கின்றது.
எனவே மறைவான இடத்தில் இருக்கும் முடிகளை ஏன் நீக்க கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ.
- நமது கண்களை சுற்றி இருக்கும் இமைகள் மற்றும் புருவத்தின் முடிகள், கண்ணில் தூசு படாமல் இருக்கவும், வியர்வையால், கண்களை பாதிக்காமல் இருக்க உதவுகிறது.
- மூக்கு மற்றும் காதுகளில் வளரும் முடியானது, நுண்ணிய பொருட்கள் உடலுக்குள் செல்லாமல் பாதுகாக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
- நமது தலையில் வளரும் தலைமுடியானது, அதிக வெப்பம் மற்றும் குளிரால் நமது தலை மற்றும் மூளையை பாதுகாப்பதற்காக தலையில் அதிகமான முடி வளர்கிறது.
- அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியானது, நாம் ஓடும் போது அல்லது உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் உராய்வுகள் மற்றும் அதிக வெப்பத்தை தடுக்கிறது. உடலுறவின் உணர்வுகளைச் தூண்டச் செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக