தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 18, 2016

இறந்தவர் இறக்கவில்லை - இலங்கையின் அமைவிடம் வேறு! பொய்யில்லை உண்மைதான்

எண்ணங்கள் உண்மையில் மனிதனுக்கு புரியாத ஓர் சவாலாகவும் புதிராகவும் காணப்படும் என்பதில் ஆச்சிரியம் இல்லை. ஆனால் இது அவனது கட்டுபாட்டின் கீழ் தான் நிகழ்கின்றது என்றால் அதுவும் நிதர்சனமே.
இன்று நம் கண்முன் நடக்கும் ஓர் விடயம் இதற்கு முன்னரும் நடந்தது போல் காணப்படும் இதன் பெயர் “தேஜாவு” இதனை பற்றி அதிகமானோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால் அதே போல் நமது மூளையை ஏமாற்றகூடிய மற்றுமொரு நிகழ்வு தான் மண்டேலா விளைவு (Mandela effect).அதாவது நீங்கள் உண்மை என பலநாட்களாக நம்பிக்கொண்டிருக்கும் ஓர் விடயம் திடீரென பொய்யாகிபோகும்.
சிலநேரங்களில் அத்தகவல் உண்மை என நிரூபிக்ககூடிய வாய்ப்புகள் அதுவரைகாலமும் இருந்திருக்கும். ஆனால் அப்போது இருந்து அதுவும் காணப்படாமல் போய்விடும் (இத்தகவல் குறித்த விளைவுடன் முரண்பட்டதாக காணப்படகூடும் குறித்த உதாரணம் புரிந்துகொள்ளும் எளிமைக்காக கூறப்பட்டது.)
குறித்த “மண்டேலா விளைவு” 2010 ஆண்டிற்கு பிறகு தான் சரியாக உணரப்படும் புரிந்துணர்வுக்கும் விளக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த ஆண்டில் ஓர் பெண் தனது ப்லாக் இணையத்தின் மூலமாக வெளிப்படுத்திய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதாவது குறித்த தகவலில் “நான் நெல்சன் மண்டேலா இறந்துவிட்ட செய்தியை 1980 வருடமே உறுதிசெய்துவிட்டேன் அதனை நான் அப்போதைய செய்தி தாள்கள் மற்றும் அவரது இறுதி அஞ்சலி என அனைத்திலுமே உறுதிபடுத்தினேன் என்பது என் நினைவுக்கு எட்டியது.ஆனால் இன்று அத்தகவல் பொய்யாகிபோனது எனக்கு பெரிதும் ஆச்சிரியம் அளிக்கின்றது என கூறியிருந்தார்”
இது ஓர் மனநிலை மாற்றத்தின், அதாவது மனநிலை பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகவல் என்று நீங்கள் கணிக்கலாம். ஆனால் அதன் உச்ச கட்டம் என்னவென்றால் குறித்த செய்திக்கு உலகத்தின் பலரும் தமது பின்னூட்டல்களை வழங்கியிருந்தனர். அதில் தமக்கும் இவ்வாறான நிகழ்வு ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
சிலரால் உண்மை என கணித்து வைத்திருந்து பொய்யாகிபோனதாக கூறப்பட்டு வரும் தகவல்கள் சில
01.இலங்கை மற்றும் நியூசிலாந்து என்ற இரண்டு நாடுகளும் வேறு அமைவிடத்தில் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்
02.சிறுவர்களுக்கான மிகப்பிரசித்தி பெற்ற நூல் “Berenstain Bears” பின்னர் “Berenstein Bears”என எழுத்துகள் மாறுபட்டு காணப்பட்டது.
03.அமெரிக்காவின் மாநிலங்கள் 51 அல்லது 52 என்ற குழப்பம்
இந்த விளைவுகளை நாம் இரண்டு அடிபடையில் வைத்து நோக்கமுடியும்
காலப்பயணம்
நாம் உண்மையாக பார்த்த விடயம் காலம் பின்செல்லுதல் மூலமாக சென்று மாற்றியமைக்கப்படல். அப்போது நமது வாழ்வும் சிறிய ஓர் நொடியின் ஊடாக மாற்றியமைக்கப்படலாம். என்ற தகவல் முரண்பாட்டிற்கு உட்படலாம்.
ஆம் அது உண்மையே அவ்வாறு ஆயிரத்தில் ஒன்று என ஏதோ ஒன்று மாற்றியமைக்கப்படாதவர்களுக்கே குறித்த மண்டேலா விளைவு ஏற்படுகின்றது.
இன்னொரு பிரபஞ்சம் காணப்படல்
இது சற்று வித்தியாசமானது நாம் இன்று இவ்வுலகில் நிகழ்த்தும் ஒவ்வொரு விடயமும் இன்னொரு பிரபஞ்சத்தில் நமது எண்ணங்கள் என்ற கோட்பாட்டின் மூலமாக நிகழ்ந்துகொண்டிருக்கலாம் அவ்வாறு ஏற்படும் பட்ச்சத்தில் அங்கு ஏற்படும் சிறு மாற்றம் பெரியளவிலான விளைவினை ஏற்படுத்தும் பொருட்டு நமது நினைவுகள் மாறாத காரணத்தால் அப்படியான நினைவுகள் எழலாம் அல்லவா? (எளிமையாக கூறபோனால் அங்கு நடைப்பெற்ற ஒன்று இங்கு நடைபெறாமல் காணப்படும் நடுவில் நமது எண்ணங்கள் மட்டும் மாறாமல் காணப்படுகின்றது.)
இந்த இரண்டு கோட்பாட்டின் மூலமாக இச்செயற்பாட்டை விளக்கப்படுத்தினால் அது நமது அறிவுக்கு எட்டும் மாறாக சற்றும் குழப்பம் ஏற்படுத்தினால் அது என் தவறில்லை.இது போன்ற விளைவு எனக்கு மட்டும் தோன்றவில்லையே என எண்ணினால் அது பிரச்சினை இல்லை காரணம் அப்படியான மாற்றங்கள் ஏற்படும் விடத்து நமது எண்ணங்கள் மாறிகொண்டுதான் இருக்கின்றது.
அப்படி மாறாத பட்சத்திலேயே குறித்த விளைவுகள் ஏற்படுகின்றன.
இதன் பின் யாரும் உங்களிடம் ஓர் முறையற்ற வரலாற்று தகவலை முன்வைத்தால் அதனை உடனேயே தவறாக கருதிவிடாதீர்கள் சற்று ஆராய்ந்து பார்த்தால் அதில் மண்டேலா விளைவு காணப்படுவதற்கு வாய்புகள் அதிகம்.

No comments:

Post a Comment