தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 நவம்பர், 2016

2017ம் ஆண்டில் ஏற்படப் போகும் ஆபத்துக்கள்! நொஸ்ட்ரடாமுஸ்ஸின் ஆரூடங்கள்

உலகளாவிய ரீதியில் பின்னர் நடக்கப் போகும் விடயங்களை முன்கூட்டியே ஆரூடம் சொல்லும் பிரபல நபராக நொஸ்ட்ரடாமுஸ் (Nostradamus) காணப்படுகிறார்.
கடந்த 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அவர் இன்று வரையில் சரியான ஆரூடங்கள் நூற்றுக் கணக்கில் அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்பதே இறுதியாக அவர் கூறியவற்றில் உண்மையாகி ஒரு ஆரூடமாகும்.
இதற்கு முன்னர் நொஸ்ட்ரமாமுஸ் வெளியிட்ட ஆரூடங்களில் 2001ஆம் ஆண்டு தாக்குதல், 2004ஆம் ஆண்டு சுனாமி, அமெரிக்க பொருளாதார நெருக்கடி போன்றவைகளாகும்.
அதற்கமைய அவர் 2017ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள ஆரூடங்களில் முக்கியமான 10 ஆரூடங்கள் பின்வருமாறு,
  • நெருக்கடிக்குள்ளாகியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திற்கு வரும்.
  • பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த நாடுகளில் உலகின் முதலாவது நாடாக சீனா மாற்றமடையும்.
  • தென் அமெரிக்க எனப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமைதியின்மை ஏற்படும்.
  • இத்தாலி நாடின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடையும். கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நெருக்கடிக்குள்ளாகும்.
  • சாதாரண செயற்பாடுகள் முற்றிலும் மாற்றமடையும். கணனி யுகம் ஒன்று முன்னேற்றமடையும்.
  • அமெரிக்கா பல நெருக்கடிக்குள்ளாகும். அரசியலில் ஸ்திரமற்ற தன்மை அதிகரிக்கும். சாதாரணமற்ற நிலைமை அதிகரித்து மக்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
  • காலநிலை நெருக்கடிகள் அதிகரிக்கும். உலகின் பிரதான பல நீர்த்தேக்கங்கள் காணாமல் போய்விடும்.
  • விண்வெளி செயற்பாடுகள் அதிகரிக்கும்.
  • சூரியசக்தி உலகில் அதிகமாக பயன்படுத்தும் சக்தியாக மாற்றமடையும்.
  • வடகொரியாவின் அதிகாரம் வீழ்ச்சியடையும். அதன் பின்னர் வடகொரியா மற்றும் தென் கொரியா ஒரு நாடாக மாற்றமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக