தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 நவம்பர், 2016

குளிர்-குருவி-சாணி-பூனை-நீதிக்கான கதை!

பயங்கரமான குளிர் ..!!
'
குளிர் தாங்க முடியாமல் ஒரு குருவி பறக்க முடியாமல் தரையில் கிடந்தது..!!
'
குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது,,, இந்த சோதனை போதாது என்று, அந்த பக்கமாக வந்த ஒரு மாடு அதன் மேல் சாணி போட்டு சென்று விட்டது...!!
'குருவிக்கு மூச்சு முட்டியது.. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சாணியின் இளம் சூடு குளிருக்கு இதமாக இருக்கவே , சந்தோஷமாக பாட்டு பாட ஆரம்பித்தது,,,ஆனாலும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டது... யாராவது காப்பாற்ற மாட்டார்களா என தவித்தது.. பாட்டு சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த பூனை , குருவியை சாணியில் இருந்து விடுவித்தது.. !!
'
குருவி நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் குருவியை சாப்பிட்டு விட்டு நடையை கட்டியது பூனை.
'
நீதி இதான்#
'
1. உன் மேல் சாணி அடிப்பதன் மூலம் சிலர் உனக்கு மறைமுகமாக நன்மை செய்து விடுகிறார்கள்.
'
2. உனக்கு உதவுபவர்கள் எல்லோரும் , நல்லெண்ணத்தில் உதவுகிறார்கள் என சொல்லி விட முடியாது.
'
3. அதிர்ஷ்டம் ஏற்பட்டால் அதை வாயை மூடிக்கொண்டுஅனுபவி..தேவை இல்லாமல் வாயை திறக்காதே,கம்னு கிட..!!

Suresh Poopalasingam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக