தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 நவம்பர், 2016

இந்த தலை அந்த உடலோடு இணையப் போகின்றது -இது கலை அல்ல அறிவியலின் மர்மம்

மனிதனது தலை விலங்கின் உடலோடு இணைக்கப்பட்டிருத்தல் அல்லது விலங்கின் தலை மனித உடலோடு இணைக்கப்பட்டிருத்தல் சிலநேரங்களில் இந்த விடயம் உங்களுக்கு நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் தென்படலாம்.
ஆனால் அவ்வாறான ஆராய்சிகள் முன்னொரு காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறினால் நம்பமுடிகின்றதா?
இவ்வாறான ஆய்வுகள் எகிப்து நாட்டில் இடம்பெற்றிருக்க அதிகமான சான்றுகள் காணப்படுகின்றன.
அந்நாட்டில் காணப்படும் அதிகமான ஓவியங்களும் சிலைகளும் இவ்வாறான விதத்தில் தான் காணப்படுகின்றது.
இதனை மேலோட்டமாக பார்க்கும் போது கற்பனை ஆற்றலின் சிறப்பான வடிவம் என சிலர் கூறலாம்.ஆனால் அதன் உள்ளேயும் நிறைய மர்மங்கள் காணப்படுகின்றது.
ஆனால் இன்றளவும் சில ஆய்வாளர்கள் எகிப்தில் இவ்வாறான ஆய்வுகள் நடந்துள்ளது எனவும் இதன் பொருட்டே பல அதிசயத்தக்க உயிரினங்கள் எகிப்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பின்னாளில் ஏதோ ஒரு காரணத்தால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கலாம் என கூறிவருகின்றனர்.
கடந்த 1851 ஆண்டில் 80 டன்கள் எடை கொண்ட கல்லினால் ஆன இராட்சத தொட்டி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 7 வெவ்வேறு வகையான விலங்குகளின் உடல் உறுப்புக்கள் எலும்புக்கூடாக கிடைத்திருந்தது.
ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் இவ்வாறான ஆய்வுகளில் தோல்வியடைந்த உயிரினங்களை குறித்த இராட்சத தொட்டியில் அடைத்து வைத்து அழித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
இந்த செயற்பாட்டை இன்னும் விளக்கமாக கூறபோனால் இந்துகடவுளான விநாயகரையும் குறிப்பிடலாம்.(மதத்தை தாழ்வாக்கி கருத்து தெரிவிக்கின்றேன் என எண்ண வேண்டாம்)
உண்மையில் மனித தலை யானையின் உடல் எப்படி சாத்தியமானது? விநாயகர் இந்துகளுக்கு மட்டும் கடவுள் இல்லை ரோமானியர்களும் விநாயகர் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட கடவுளை வணங்கியிருக்கின்றார்கள். மேலும் இதுபோன்று கருடபகவான், நாகதேவதை எனகூறிக்கொண்டே போகலாம்.
அவ்வாறெனில் மனித சமூகம் அறிவியலின் தோற்றப்பாட்டின் முன்னரே இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பார்களா? அவ்வாறு எனின் அவர்கள் எங்கு சென்றனர்?
சில நேரங்களில் அதன் பின் மரணத்தை வெல்லும் விஞ்ஞானத்தையும் அறிந்த அவர்கள் தான் இன்று வேற்றுகிரகவாசிகளாக உலாவருகின்றனரா?
இவ்வாறான அதிகமான கேள்விகள் எழலாம். ஆனால் மனிதர்களுக்கும் சிறிது மர்மம் காணப்பட்டால் தான் சுவாரசியம்.
http://news.lankasri.com/science/03/112528

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக