நாம் தற்காலிகமாக பிரித்தானியாவில் இருக்கும் நம் நிரந்தர குடியுரிமை பெற்ற குடும்ப உறுப்பினருடன் தங்கியிருந்தாலோ அல்லது European Economic Area (EEA) வை சேர்ந்த நாடுகள் மற்றும் சுவிற்சர்லாந்தில் இருந்தாலோ இதை செய்ய முடியும்.
ஒருவர் நிரந்தரமாக பிரித்தானியாவில் செட்டில் ஆக, அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானியா குடிமகனாகவோ அல்லது நிரந்தரமாக அங்கு தங்கும் தகுதியை பெற்றவராகவோஇருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
இதற்கு விண்ணப்பிக்க, கடவுச்சீட்டு அல்லது அதற்கு இணையான முறையான பயண ஆவணங்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
யார் இதற்கு விண்ணப்பிக்கிறார்களோ அவர்களின் பிரித்தானியா நிரந்தரவாசி குடும்ப உறுப்பினரின் குடியுரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ விண்ணப்பிக்க வேண்டுமானால் நேரடியாக, தபால் மூலம் மற்றும் ஆன்லைனில் செய்யலாம்.
இதுவே வேறு குடும்ப உறுப்பினருகென்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம்?
எந்த வழியில் விண்ணப்பிக்கிறோம் என்பதை பொருத்து கட்டண விபரங்கள் மாறும்.
அதாவது, ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிக்க ஒருவருக்கு £811 மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க £1,311மும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிமம் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் 8 வார காலத்திற்குள் சரி பார்க்கப்படும்.
நேரடி விண்ணப்பங்கள் விண்ணப்பித்த அதே நாளில் பார்க்கப்படும்.
நாம் சமர்பித்த விண்ணப்பத்திலோ அல்லது ஆவணங்களில்லோ ஏதாவது சிக்கல் இருந்தால் அது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படும்.
இதில் ஆவணத்தில் ஏதேனும் பிழை, விண்ணப்பித்த நபரின் மேல் எதாவது குற்ற செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் போன்றவைகள் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக