தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 நவம்பர், 2016

பெண்களுக்கு உதவி!!??பெண்களே உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வீர்களாக!!!

01)பெண்கள், பிள்ளைகள் சமுதாயத்தில் அனேகமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதினால் அவர்களுக்கு துன்புறுத்தலோ,பயமுறுத்தலோ ஏற்படாத வகையில் செயல்படுவது சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.
02)பெண்கள் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் பிரயாணம் செய்வதை தவிர்க்கவும் உங்களால் எதுவிதமாக அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்துக் கொள்ளவும்.
03)பெண்கள்,பிள்ளைகள் புகையிரதத்தில் அல்லது பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு அசௌகரியமோ, துன்புறுத்தலோ ஏற்படாதவாறு செயல்படுத்தவும். பெண்களுக்கோ,பிள்ளைகளுக்கோ ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின் அது சம்பந்தமாக ஈடுபடுதல் உமது பொறுப்பென உணர்ந்து கொள்ளவும்.
04)வழிதவறிப் பெண்கள் அல்லது பிள்ளைகள் காணுமிடத்து உடனடியாக சந்தேகத்திற்கிடமில்லாது உதவி செய்யவும் இல்லாவிடின் சமுதாயத்தில் வேறு ஒருவர் இவ் இயலாத சந்தர்ப்பத்தை பிரயோகித்து துன்புறுத்துவதற்கு வழி வகுக்கும்.
05)பாடசாலைப் பிள்ளைகள் பாடசாலைக்கு போகும்போதும், வரும்போதும் வேறு வகுப்புகளுக்குச் செல்லும் போது இயலுமானளவு தனியாக செல்வதைத் தவிர்க்கவும்.எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு பிள்ளைகளுடன் அல்லது வயதுபோன ஒருவருடன் செல்வது மிகவும் சிறந்தது.
06)மேலதிக சிறுவர் துஷ்பிரயோகம் இனேகமாக காணப்படுவதினால் உங்கள் பிள்ளைகளுடன் நித்தமும் மேலதிக வகுப்புகளில் நடைபெறும். செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கவும். அப்போது சில தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன் அதன் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும்.
07)மேலதிக வகுப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள சட்டவிரோத விற்பனை சாலைகளில் பொருட்களினை வாங்குவதை தவிர்க்கவும்.இச்சட்ட விரோத விற்பனை நிலையங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அத்துடன் பிள்ளைகளை ஏமாற்றி இப் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளமையால் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
உங்களுக்கு தீயசெயல் ஏற்படின் நீங்கள் செய்ய வேண்டியவை.
ஒருவரின் தீயசெயலுக்கு நீர் உட்பட்டால் நீர் என்ன செய்ய வேண்டும்?அதைப் பற்றி சிந்திக்கவும் அந்த எதிர்பை பிரயோகிப்பவருக்கு எதிராக எதிர்ப்பை பிரயோகிக்க உம்மால் முடியுமா? முடியாவிடில் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று அதிகாரதுள்ள உத்தியோகஸ்தருக்கு அறிவிப்பீரா என்ற காரணம் சம்பந்தமான தீர்மானிக்க வேண்டியவர் நீரோ?இப்படியான சந்தர்ப்பத்தில் உம்மை தயார் படுத்ததுவதற்கு கீழ் கூறப்பட்ட காரணிகள் உமக்கு உதவும்.
01.உமக்கு ஊறு விளைப்பதற்கே அல்லது அச்சுறுத்தல் புரிவதற்கு என்று காணுமிடத்து உடனுனே அவ்விடத்திலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கவும்.
02.அப்படி முடியாத சந்தர்ப்பத்தில் சத்தமிட்டு மற்றவர்களுடைய உதவியை நாடவும் இப்படிச் செய்வதினால் எதிர்ப்பாளர்கள் அவ்விடத்திலிருந்து ஓடிப் போவதற்கு இடமுண்டு.
03.இலங்கைச் சட்டத்தின் படி ஒருவருடைய உயிருக்கு அல்ல ஆதனங்களுக்கு சேதம் ஏற்படுமிடத்து அல்லது திடீர் பயம், திடீர் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டால் தன்னுடைய பலத்தை பிரயோகித்து தம்முடைய உயிரையும், உடமைகளையும்,பாதுகாப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு ஆனபடியால் பலத்தை பிரயோகிப்பதற்கு அச்சந்தர்ப்பத்தில் அச்சம் கொள்ள வேண்டாம்.எனினும் அவசியத்திற்கு தகுந்த பலத்தை மட்டுமே பிரயோகிக்கலாம்.அப்படியானா அச்சுறுத்தல் இல்லாத போது மேலதிக பலத்தை பிரயோகிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
பெண்களும், பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் பாதுகாத்தலும், அதற்கு உட்பட்டால் எடுக்க வேண்டிய நடைமுறைகளும்..
01) குழந்தைகள் சிறுவயதினர் நடுத்தர வயதுடைய பெண் பிள்ளைகள் குற்றவாளியின் இலக்குக்கு ஆளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். அப்படியான துஷ்பிரயோகங்கள் எச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் என்று கூற முடியாது. இப்படியான சந்தர்பத்தில் இடமளிக்காது செயற்படுதல் முக்கியம்.
02) ஆள் நடமாட்டமற்ற பாதை, இருளடைந்த பாதைகள் மது போதையில் உள்ளவர்கள் நடமாடும் இடங்கள், சண்டை சச்சரவுகள் உள்ள இடங்களை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.
03)நீங்கள் அணியும் ஆடைகள் பற்றி மிகவும் கவனத்தை செலுத்த வேண்டும். உடல் உறுப்புகள் தெரியக் கூடிய உடைகள் , அணிந்துள்ள ஆபரணங்கள் தெரியக் கூடியதான அணியும் உடைகள் ,பெண்கள், குழந்தைகள் இவ்வாறான துஷ்பிரயோகத்துக்குக் உட்படுத்தப்படுவது அதிகம்.
04) மேற் கூறப்பட்ட கருத்துக்கள் சம்மந்தமாக உங்கள் அவதானத்தை செலுத்தவும்.
05) முன்பின் அறிமுகம் அற்ற தெரியாதவர்களுடன் கதைப்பதோ, வாகனங்களில் செல்வதையோ தவிர்த்து கொள்ள வேண்டும்.
06) பாதையில் செல்லும் போது பலதரப்பட்ட ஓசைகள், தேவையற்ற வார்த்தைகள் உமது காதில் கேட்குமிடத்து அதை பொருட்படுத்தாமல் உடனே அவ்விடத்தை விட்டு செல்வது சிறந்தது. அப்படியானவர்களுடன் கதைப்பதற்கு செல்லவேண்டாம். அவ்விடத்தில் நிற்க வேண்டாம். கோபம் கொள்ள வேண்டாம்.
07) துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டால் அவ்விடத்தில் இருந்து தப்பி அருகில் இருக்கும் அதிகாரி ஒருவருக்கு அல்லது பொறுப்பு வாய்ந்த ஒருவருக்கு அறிவிக்கவும்.
01. தான் முகம் கொடுத்த சம்பவத்தை தெளிவாக தெரிவிக்கவும்.
02. உமக்கு இடையூறு விளைவித்தவரின் பெயர் அல்லது அவரைப் பற்றிய விபரம் தெரியுமாயின் அதையும் விபரமாக கூறவும்.
03. பெயர் விலாசம் தெரியாவிடின் அவரை பற்றிய விபரம் தெரியுமாயின் அணிந்திருந்த ஆடையின் நிறம் தெரிந்து இருக்குமாயின் அவ் முழு விபரத்தையும் தெரியப்படுத்தவும்.
04. ஆளை கண்டால் அடையாளம் காணமுடியும் என்பதை தெரியப்படுத்தவும்.
05. இதற்கு முன் அவ் ஆளினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அந்த காலப்பகுதியையும் தெளிவாக விபரிக்கவும்.
06. வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசியமாயின் அனுமதியை பெற்று வைத்தியருக்கும் நடந்த சம்பவத்தை அறிவிக்கவும் உங்களை வைத்தியப் பரிசேதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்
07. கற்பழித்தல் சம்பவமாயின் அணிந்திருந்தஆடைகள் எல்லாவற்றையும் விசாரணை செய்வதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கவும்.
08. முதல் பரிசோதனை முடியும் வரை கற்பழித்தல் சம்பவத்திற்கு உட்டுத்தப்பட்டவராயின் வீட்டிற்கு சென்ற முகம் கைகால் கழுவுதல் குளித்தல் ஆகியவற்றில்இருந்து தவிர்க்கவும்.
09. வாகனத்தில் வந்து தாக்கியவராயின் அவ்வாகனத்தின் நிறம், வர்க்கம் மற்றும் இலக்கம் ஆகியவற்றை விசாரணையாளருக்கு அறிவிக்கவும்.
10. எல்லா சந்தே நபர்கள் சம்பவத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இதற்கு முன் நடைபெற்ற சம்பவம் யாவற்றையும் விசாரணயைாளருக்கு அறிவிக்கவும்.
11. கற்பழித்தல் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுவது தெரியாதவர்கள் மட்டும் அல்ல தெரிந்தவர்களினாலும் இப்படி எல்லா சம்பவங்களும் விசாரணையாளருக்கு அறிவிப்பது அவசியம்.நீங்கள் குற்றம் புரிந்தவர் என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .
12. காரியாலயங்களில் பெண்களுக்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பல தரப்பட்ட இப்படியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டலாம் பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள் புத்தகங்கள் பத்திரிகைகள் காரியாலயங்களில் உள்ளவர்களினால் அவர்களுக்கு காண்பிக்கப்படுவதினாலும் வாசிப்பதினாலும் அவர்களை தூண்டி திசைதிருப்பும் வழி வகுக்கின்றார்கள் அப்படியானவற்றை பார்த்தல் வாசித்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்த்தல் மூலம் இப்படியான துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும்.
13. இப்படியான துஷ்பிரயோகம் வீட்டினுள் அல்லது தனது கணவரினால் செய்யப்படுமாயின் அப்படியான செயல் வீட்டினுள் துஷ்பிரயோகம் என கணிக்கப்படலாம். அப்படியான சம்பவங்களுக்கு உட்படும் பெண்கள் இந்நாட்டில் அதிகம் சரீர உடல் ஊறு , பாலியல் துஷ்பிரயோகம், தனது மனைவிக்கு ஆயினும் பிரயோகிப்பதற்கு கணவருக்கும் அதிகாரம் இல்லை எப்படியாயினும் குடும்ப சமாதானத்திற்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியுள்ளதால் அத் துஷ்பிரயோகத்தில் இருந்து விலகி இருத்தல் மிகவும் சிறந்ததாக கொள்ளப்படும்.அப்படியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவராயின் எந்தவொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம்.
14. வீட்டினுள் வெறுப்பு, மன நிலை கொடுமை ஏற்படுமாயின் கணவருக்கு அறிவுரை தேவைப்படின் அப்படியான உபதேசம் செய்யும் இடங்கள் அதிகம் உண்டு. இது சம்பந்தமாக விபரங்கள்சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தில் இருந்து பெற்று கொள்ள முடியும்.
15. இப்படியான துஷ்பிரயோகங்கள் வெளியில் கூறாமல் இரகசியமாக வைத்து கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டாம்.அப்டியாயின் இந்த நிலை மேலும் தீவிரம் அடையும்.பிரச்சினைகளுக்குட்பட்ட பெண்கள் தமது பெற்றோரிடம் அல்லது கிட்டிய இதை யாரிடம் அல்லது நம்பிக்கைக்குரிய அக்கம் பக்கத்தவரிடம் இது பற்றி அறிவித்து அதற்குரிய நடவடிக்கை என்ன என்று தெளிவாக திட்டம் தீட்டுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் வெட்கப்பட வேண்டாம்.சமுதாயத்தில் இப்படியானவர்களை பாதுகாப்பதற்கு உரிய நபர்களும் அமைப்புக்களும் பல உண்டு ஆகையினால் அச்சமின்றி அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்களை பெற்றுகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக