தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 நவம்பர், 2016

மை தடவி பார்க்கும் மாந்திரீகத்தின் ரகசியம் தெரியுமா?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும். அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்
”ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா”
என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக