தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 நவம்பர், 2016

கோடி நன்மைகளை அருளும் சஷ்டி விரதம் : பெண்களுக்கு இந்த விரதம் ஒரு வரம்!

ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் ‘சஷ்டி விரதம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை நினைத்து வழிபட சிறந்ததாகும்.
இந்த ஆறு நாட்களில்தான் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோருடன் போரிட்டு, முருகப் பெருமான் தேவர்களை காத்தருளினார்.
பகைமையை வெல்வது அல்ல சஷ்டி விரதம். பகைமையை மாற்றி, ஞானம் பெறச் செய்வதே சஷ்டி விரதத்தின் சிறப்பு.
இது ஞானத்திற்கான திருவிழா. சூரபதுமனை அழிப்பது ஆணவத்தை அழிப்பதாக கருதப்படுகிறது.
கந்த சஷ்டி விழா, முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட சகல முருகன் ஆலயங்களிலும் நடைபெறும் முக்கிய விழாவாகும்.
விரதம் இருப்பது எப்படி?
பூஜை அறையை சுத்தம் செய்து, அறுங்கோணக் கோலம் வரைய வேண்டும். அந்த கோலத்தின் மீது குத்துவிளக்கை வைத்து, விளக்கேற்றி முருகப்பெருமானை பூஜிக்க வேண்டும்.
இது தவிர ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை தங்களின் உடல் நிலைக்கு தக்கவாறு அனுஷ்டிக்கலாம்.
ஆறுநாட்களும் எந்தவித அன்ன ஆகாரம் இன்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் உணவு உண்டு, கடைசி நாளில் முழு உபவாசம் இருந்தும் விரதத்தை மேற்கொள்வார்கள்.
இறுதிநாள் முழுவதும் கண் விழித்து முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
அடுத்த நாள் காலை முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொண்டால், குடும்பத்தில் நிலவும் துன்பங்கள் விலகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.
மேலும் இந்த விரதத்திற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு. ‘சஷ்டியில் இருந்தால் அகப்பை (கரு)யில் வரும்’ என்பது பழமொழி.
ஆம்.. சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அவன் அருளால் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்களுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்புக் குரிய விரதமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக