தற்போது மோனலிசா டாவின்சியால் வரையப்பட்டதா அல்லது வேரு ஒருவர் வரைந்ததா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டாவின்சி படைத்த கற்பனை ஓவியங்களில், இன்றைய நவீன கண்டுபிடிப்புகளின் தாக்கம் இருப்பதும் பரவலாக கூறப்பட்டு கொண்டு வரும் செய்திகளாகும்.
மோனலிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதை டாவின்சி மறைத்துள்ளார். என்றும் அதற்கான சான்று ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
இவற்றில் ஓரளவு நம்பகத்தன்மையும் காணப்படுகின்றது. குறிப்பாக 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் தமது கற்பனை திறனுக்குள் தற்போதைய காலத்திலும் சர்ச்சையாகி உள்ள வேற்றுக்கிரக வாசிகளை கொண்டு வந்துள்ளார் என்றால் அது சிந்திக்கப்பட வேண்டியதே.
அப்போது டாவின்சி வேற்றுக்கிரகவாசிகளை கண்டதாலேயே இவ்வாறான ஓவியங்களை படைத்திருப்பார். என்றும் ஒரு சாரர் கூறிவருகின்றனர். இல்லாவிடின் போக்குவரத்தே சிரமமாக காணப்பட்ட காலத்தில் பறக்கும் தட்டை தனது ஓவியத்தில் கொண்டு வந்தது எவ்வாறு என்ற கேள்வியே முன்னிலை வகிக்கின்றது.
நீங்களும் ஓர் மோனலிசா ஓவியத்தினை எடுத்து குறித்து காட்டியுள்ள விடயங்களை உற்று நோக்கினால் உண்மையிலேயே வேற்றுக்கிரக வாசி உருவம் இருப்பது தெரியும். அதேபோன்று டாவின்சியின் ஏனைய ஓவியங்களையும் எடுத்து நோக்குங்கள் மர்மங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
டாவின்சி உருவாக்கிய அனைத்து ஓவியங்களிலும் மர்மங்கள் காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் உலகிற்கு எதனை கூற வருகின்றார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.
மேலும் அவரை ஒரு தீர்க்கதரிசியாகவே ஆய்வாளர்கள் கூறிவந்தாலும் உண்மைகளை மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை. புகழ் பெற்ற ஓவியங்களை ஏன் மர்மமாக படைக்கவேண்டும் இவை டாவின்சி படைத்ததா அவரின் மூலம் மறைமுகமான விடயங்கள் உலகுக்கு கூறப்படுகின்றதா என்பது காலத்திற்கே வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக