தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 மார்ச், 2015

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட`நோக்கியா 1100’ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியீடு!

நோக்கியா நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதியில் `நோக்கியா 1100’ பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தற்போது ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மவுனமாக இருந்து வருகிறது நோக்கியா.
இந்நிலையில் `நோக்கியா 1100’ என்ற ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த போன் வெளியாகும் போது சிறப்பம்சங்களில் மாறுதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
புதிய தகவல்களின் படி நோக்கியா 1100, ஆன்டிராய்டு 5.0 இங்கு தளத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் மற்றும் எம்டி6582 சிப்செட் கொண்ட கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் கொண்டிருக்கும்.
மேலும் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் மெமரி இருக்கலாம். டிஸ்ப்ளேவை பொருத்த வரை 1280*720பி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 எம்பி ப்ரைமரி கமெரா மற்றும் ஹெச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி இருக்கும். ஆனால் செல்ஃபீ எடுக்க உதவும் முன் பக்க கமெரா இருக்குமா என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.
3ஜி, வைபை 802.11எக்ஸ், ஜிபிஎஸ் மற்றும் எப்எம் ரேடியோ இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதனுடைய பேட்டரி அதிகபட்சம் 2500 எம்ஏஎஹ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக