தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 நவம்பர், 2014

இயற்கை எழில் கொஞ்சும் “மச்சு பிச்சு” (வீடியோ இணைப்பு) !


இன்காக்களின் தொலைந்த நகரமான மச்சு பிச்சு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
பெரு நாட்டின் கஸ்கோ என்னும் நகரின் வடமேற்கே 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது “மச்சு பிச்சு”.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2400 மீ. உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம், இன்கா பேரரசு காலத்தை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க பழைய நகரமாகும்.
இன்காக்களின் தொலைந்த நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், 1450ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. பின்னர் இதனை ஸ்பானியர்கள் கைப்பற்றியுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரம், 1911ம் ஆண்டில் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாவாசிகளின் முக்கிய இடமாக மாறியுள்ளது.
இன்கா காலத்தின் கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ள இந்த மச்சு பிச்சு, உலர் கற்களை கொண்டு கட்டப்பட்ட பளபளப்பாக்கப்பட்ட சுவர்களை கொண்டுள்ளது.
இங்கு “இன்டிகுவாட்டானா” என்ற அமைப்பு வானியல் மணிக்கூடாக அதாவது, சூரிய கடிகாரமாக கருதப்படுகிறது.
1981ம் ஆண்டு பெரு அரசாங்கத்தால் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்ட மச்சு பிச்சு, 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைந்த நகரமாக கருதப்படும் இந்த மச்சு பிச்சுவின் கட்டடக் கலையையும், இயற்கை அழகையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக