மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. |
இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று. இது உலகிலேயே மிகப் பெரிய மற்றும் உயரமான தனி பாறையாகும். 83மீ உயரமுள்ள இம்மலைக்கோட்டை கிபி 580ல் பல்லவர்களால் கட்டப்பட்டு, பின்னர் நாயக்கர்களால் முழுமைப் பெறப்பட்டது. இராமாயணக் காலத்தில் விபிஷணனிடம் இருந்து அரங்கநாதர் சிலையை கைப்பற்றிய பிள்ளையார் அதை தற்போது ஸ்ரீரங்கம் கோயில் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு விபிஷணனிடம் இருந்து தப்பிக்க இந்த மலையுச்சிக்கு வந்து சேர்ந்ததாக ஐதீகம். மலைக்கோட்டை அடிவாரத்தில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதில் பங்குனி மாதத்தில் தெப்பம் நடைபெறும். மலைக்கோட்டை கோயில் 3 கோயில்களை தொகுப்பாகக் கொண்டது. அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது, உச்சியில் உச்சி பிள்ளையார் கோயில் உள்ளது. உச்சிக்கு செல்லும் வழியில் தாயுமானவர் கோயில். இதுவும் முழுக்க குகையைக் குடைந்து கட்டப்பட்டது. |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 4 நவம்பர், 2014
உச்சிபிள்ளையார் ஆலயம் செல்வோம்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக