மனிதர்களை வாட்டி வதைக்கும் உயிர்கொல்லி நோயாக மார்பகப் புற்றுநோய் விளங்குகின்றது.
இந்நோயை குணப்படுத்துவதற்கும், தவிர்ப்பதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சி ஒன்றில் மார்பகப் புற்றுநோயை தவிர்ப்பதற்காக 5 வழிமுறைகளைக் பின்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சீரான கால இடைவெளிகளில் கண்ணாடிகளின் முன் நின்று மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தல். இதன் மூலம் மாற்றங்கள் ஏற்படும்போது வைத்தியர்களை அணுகி தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
* தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் மூலமும் மார்பகப் புற்றுநோயை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இவ்வாறு பாலூட்டுவதன் மூலம் உடலின் சுற்றோட்டத்தொகுதி சீராக இயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
* மட்டுப்படுத்தப்பட்ட அல்கஹால் பாவனை
* மித மிஞ்சிய கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்
* உடல் எடையினை கண்காணித்தல் என்பவற்றின் மூலமும் மார்பகப் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாவதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக