தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 நவம்பர், 2014

திருநீறு அணிவதற்கு ஆன்மிகமும், அறிவியலும் கூறும் காரணங்கள் !!!


திருநீறு அணிவதற்கு பல நல்ல காரணங்கள் கூறப்படுகின்றன. இதனை ஆன்மிகமும், அறிவியலும் எவ்வாறு பார்க்கின்றன என்பதை இங்கே காணலாம்.

நிலையாமையை உணர்த்தும் அரிய மகத்துவம் வாய்ந்த பொருளாக திருநீறு அமைந்துள்ளது. இந்த மானிட உடலானது ஒரு நாள் இந்த திருநீறைப் போல சாம்பலாகும். திருநீறை அணிகிறவர்களுக்கும், அதனைப் பார்க்கிறவர்களுக்கும் உலகின் மிகப்பெரும் நிலையாமை தத்துவத்தை உணர்த்துகிறது திருநீறு. திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி
திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.

திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்

மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.

கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.

நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து
நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.

அறிவியல் சொல்லும் விஷயம் என்ன..

திருநீறுக்கு, அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. எனவே,நெற்றியின் நடுவில் இருக்கும் ஆக்ஞா சக்ரா பகுதியில் திருநீறு பூசிக் கொள்வது நல்ல அதிர்வுகளை உள்ளுக்குள் ஈர்த்தி, தீய அதிர்வுகளை தடுத்து விடவும் உதவும்.
மேலும், சிலர், சக்திகளை வசப்படுத்தி, மற்றவர்களை தன்னிலை இழக்கச் செய்ய அவர்களது ஆக்ஞா சக்ரா பகுதியில் முயற்சி செய்வர். அதுபோன்ற ஆட் கொள்ளல்களை தடுத்து நிறுத்த இந்த திருநீறு நெற்றியில் இடப்படுவதன் மூலம் நம்மை காக்கிறது.

இது மட்டும் அல்லாமல், திருநீறு பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. திருநீறு நல்ல கிருமி நாசினியாகவும் உள்ளது. பலரும், அடிக்கடி சளி பிடிக்கும். இவர்கள் குளித்து முடித்தவுடன் நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம், அவர்களுக்கு சளிப் பிடிக்கும் வாய்ப்பு குறையும். மேலும், வியர்வையை உறிஞ்சும் தன்மையும் திருநீறுக்கு உண்டு.

திருநீற்றை பூசும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


1. திருநீற்றைத் பூசும் போது கீழே தரையில் சிந்த விடக்கூடாது.

2. திருநீறு பூசும் போது காதுகளிலும், தோள்களிலும் படியுமாறு தலை அண்ணாந்து இருக்க வேண்டும்.

3. பக்தியுடன், பணிவாக நின்று கொண்டுதான், திருநீறு பூச வேண்டும். உட்கார்ந்தும், நடந்தும், படுத்தும் திருநீறு பூசக்கூடாது.

4. திருநீற்றைத் தரிக்கும் போது, வெறுமனே தரிக்கக்கூடாது. சிவாய நம, நமச்சிவாய சிவ சிவ, முருகா, சரவணபவ என்று ஓர் ஆண்டவரின் பெயரையாவது உச்சரித்தப்படி தரிக்க வேண்டும்.

5. ஆன்மீக பெரியோர்கள் பெற்றோர், சான்றோர் வழங்கிய திருநீற்றைப் பெற்றுக் கொண்டதும், முகத்தைச் சற்று திருப்பதி நின்று தரிப்பது பண்பாடாகும்.

6. ஒரு கையால் ஆர்வமில்லாமல் திருநீற்றைப் பெற்று ஒரு விரலால் பக்தி இல்லாமல் திருநீற்றைப் தரிப்பது நல்லதல்ல. இது இறைவனை அலட்சியப்படுத்துவதை போன்றதாகும்.

7. திருநீற்றைப் தரிக்கும் போது அண்ணாந்த வாயைத் திறக்ககூடாது. தலை நடுங்கக்கூடாது. திருநீறு சிதறும்படி தலையைத் தாழ்த்தவும் கூடாது. திருநீறு தரிக்கும் போது தெய்வ சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கூடாது.

8. திருநீற்றைப் பெற்றதும் உதறி விடுவதும், கையை தட்டுவதும், ஊதுவதும் குற்றங்களாகும். 9. திருநீறு அதிகப்படியாக கிடைத்தால் அதை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உச்சியிலும், நெற்றியிலும், திருநீற்றைக் கண்டிப்பாக எப்போதும் தரிக்க வேண்டும் என்றாலும் நமது உடம்பின் பதினாறு அல்லது முப்பத்தி இரண்டு இடங்களில் திருநீற்றைத் தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பிலும் திருநீற்றைத் பூசும் போது இறைவனது திருநாமங்களை அல்லது தக்க மந்திரத் தொடர்களை இடைவிடாமல் உச்சரிக்க வேண்டும்.

பதினாறு இடங்கள்........

1. தலையுச்சி, 2. நெற்றி, 3. மார்பு, 4. தொப்புள், 5,6 - முழங்கால்கள்-2, 7, 8 - தோள்கள் இரண்டு, 9, 10 - முழங்கைகள் இரண்டு, 11, 12 - மணிக்கட்டுகள் இரண்டு, 13, 14 - விலாப்புறம் இரண்டு (அ) காதுகள் இரண்டு, 15 - முதுகு 16- கழுத்து, சில பெரியோர் முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு என நான்கு இடங்களை நீக்கித் திருநீறு தரிக்குமிடங்கள் பன்னிரண்டு என்று கூறுவர். திருநீறு பூசிய உறுப்புகளுக்கு அதுவே கவசமாக விளங்குகிறது.

அனைவருக்கும் என் இனிய வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் ~ சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக