தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 நவம்பர், 2014

மனசே…ரிலாக்ஸ் ப்ளீஸ்!


கவலையையும், மன வேதனையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் இயல்பான ஒன்றுதான்.
ஆனால் மன அழுத்தம் அடையும் போது இந்த சோர்வும் கவலையும் இடைவிடாது நீடித்து விடுகிறது.
அல்லது இந்த கவலையும், சோர்வும் அடிக்கடி அன்றாட வாழ்கையில் அதிகரித்து குழப்பமடைய செய்கின்றன.
தூக்க குழப்பம், கடும் களைப்பும், சோர்வும், காலையில் எழுந்திருக்க முடியாமை, பசியின்மை, தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை, தான் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றுதல் போன்ற இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஆனால் இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், இதுபோன்ற மனோ நிலையுடன் ஒருவர் தொடர்ந்து இருக்கபோவதில்லை.
அவரை சுற்றி இருக்கும் சூழ்நிலை மாறிவிட்டால், இந்த மன அழுத்தம் மாறிவிடும். அல்லது அவர் நினைத்தது நடந்துவிட்டால் அதன் பின்னர் அவருக்கு மன அழுத்தம் என்பது வராது.
சிறுவயதில் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் சிலருக்கு இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.
மன அழுத்தம் பொதுவாகவே சமூகத்தில் காணப்படக்கூடிய சாதாரண நோய் நிலைதான்.
இளம் வயதில், குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமான நேரத்தில் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. நம்மில் ஐந்தில் ஒருவருக்கும் இந்த மன அழுத்தம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே இது பற்றி அச்சப்படவோ, வெட்கப்படவோ, சங்கடப்படவோ கூடாது. இதனைப் புறக்கணிக்கவும் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக