நம் உடல் அரோக்கியத்தை வலுவாக்க உதவுவதில் காய்கறிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
காய்கறிகளில் உள்ள மகத்துவங்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஓர் விடயமாகும். அதிலும் பெண்களின் பிரசவ காலத்தில் காய்கறிகளை உட்கொள்வது மிக அவசியமாகும்.
பிரசவம் எளிதாக நடைபெற
கர்ப்பம் உருவானது முதல் முருங்கைக் கீரை, பாலகீரை உள்ளிட்டவையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
மேலும் மனத்தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை தரும்.
குழந்தைகளுக்கு சூப்பர் சத்துணவு
உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, காலிஃபிளவர், முருங்கைக்கீரை, பச்சைப் பட்டாணி, முள்ளங்கி, சேப்பங்கிழங்கு, புதினாக்கீரை, வள்ளிக்கிழங்கு, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் வளரும் குழந்தைகளுக்கு சிறந்த சத்துணவாகும்.
மஞ்சள் காமாலையை விரட்டுங்க
வாழைத்தண்டு, வெள்ளைப்பூண்டு, தக்காளி, மணத்தக்காளி, முருங்கைக்காய், காரட், பீட்ரூட், புடலங்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் மஞ்சள் காமலை நோயை கொல்லும் தன்மை கொண்டது.
பித்தக் கோளாறால் அவஸ்தையா?
முருங்கைக் கீரை, பீட்ரூட், வெள்ளரிக்காய், புதினா, பறங்கி, பூசணி, கத்தரிக்காய், சுரைக்காய், இஞ்சி, பசலைக்கீரை, கொத்துமல்லி ஆகியவை பித்தத்தை தணித்து உடலை அரோக்கியமாக வைக்கும்.
முடி நன்கு வளர
இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளான பூசணிக்காய், வல்லாரைக் கீரை, பசலைக் கீரை, வெள்ளைப்பூண்டு, புதினாக்கீரை, புடலங்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களை சாப்பிடுவதால் முடி நன்கு வளரும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக