ஒரு நட்சத்திரத்தை சுற்றி கிரகங்கள் உருவாவதை வெளிப்படுத்தக்கூடிய தெளிவான புகைப்படம் சிலியிலுள்ள வானலை தொலைநோக்கி ஒன்றில் பதிவாகியுள்ளது.
இந்தப் புகைப்படத்தில் தூசுகள், வாயுக்கள் போன்றவையும், கறுப்பு வளையங்களும் தெளிவாக தெரிகின்றன. ஒழுக்கைச் சுற்றி வலம் வரும் புதிய கிரகங்கள் மூலம் மேகக்கூட்டங்கள் நகர்த்தப்படுகையில் எழும் இடைவெளிகளும் தெரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரியனுக்கு சமமானதாக காணப்படும் எச்எல் டாவோ என்ற நட்சத்திரம் பத்து இலட்சம் வருடங்களுக்கு முன்னர் உருவானதாக கருதப்படுகிறது.
இது பூமியிலிருந்து 450 ஒளி வருடங்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நட்சத்திரத்தை சுற்றி கிரகங்கள் உருவாகும் விதத்தை அல்மா தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக