தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஏப்ரல், 2014

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க எளிய குறிப்புகள்...


முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது... செழுமையான கன்னங்கள்! ஆப்பிள் போல கன்னங்கள் இருந்து விட்டால், அப்சரஸ்தான் நீங்கள்! ஆனால் சிலருக்கு, அந்தத் தளதள கன்னங்களே கவலைத் தருவதாக அமைந்து விடும். ஆம்... சிலரின் பருத்த கன்னங்கள், அவர்களை இன்னும் பருமனாகக் காட்டலாம். 

இன்னும் சிலருக்கு, அடிக்கடி பார்லரில் பேசியல், ப்ளீச்சிங் என்று செய்து கொள்வதால் தோலின் இறுகும் தன்மை தளர்ந்து, அவர்களின் தக்காளி கன்னங்கள் தொய்வடைய வாய்ப்பு இருக்கிறது. "இந்தக் குண்டு கன்னத்தால் முகம் ரொம்பக் குண்டா தெரியுது..'' என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம். 

இவர்கள், தன் கன்னங்களின் பருமனைக் குறைக்கவும், அதே சமயம் அவற்றின் பொலிவு போகாமல் காக்கவும் இங்கு உள்ள அழகுக் குறிப்புகளை கவனமாக பின்பற்றினால், கன்னம் பற்றிய கவலை இனி உங்களுக்கு இல்லை. 

* தினமும் காலையில் கேரட் - தக்காளி ஜுஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

* பார்லி பவுடருடன் கேரட் சாறு கலந்து வாரம் இரு முறை கன்னம், முகத்தில் தடவி கழுவலாம். பார்லி பவுடர் அல்லது கேரட் சாறுடன் கால் டீஸ்பூன் முல்தானிமட்டி பவுடரைச் சேர்த்து வாரம் ஒரு முறை முகத்தில் பூசலாம். 

தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகத்திலிருந்து தனித்துத் தெரியாமல் உப்பிய கன்னங்கள் உள்வாங்குவதுடன், பளபளப்பு மற்றும் பொலிவு முகத்தில் கூடும். வயது ஏறும் காரணத்தினாலோ, ப்ளீச்சிங், பேசியல்கள் தந்த பரிசாலோ... கன்னங்களில் சதை இளகித் தொங்கிறதா... அதை மீண்டும் `ஸ்டிப்' ஆக்க... 

* சர்க்கரை, வெள்ளரி விதை.. இவை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கன்னம், முகத்தில் ஒரே சீராகப் பூசுங்கள். 

50 மில்லி தேங்காய் எண்ணெயை நன்றாகக் காய்ச்சி.. அதில் 25 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூள், 10 கிராம் விரலி மஞ்சள் தூள், சிற துண்டுகளாக நறுக்கிய வெட்டிவேர் 10 சேர்த்து மூடிவிடுங்கள். இந்தத் தைலத்தை தினமும் குளிப்பதற்கு முன், கன்னங்களில் மேலிருந்து கீழாக தேய்த்து மசாஜ் செய்வதால், வறண்டு தொய்ந்த தோலின் எண்ணெய்ப் பசை ஏறி, கன்னத்தின் சதை இறுகும். 

* சிலருக்கு தலையில் நீர் கோத்துக் கொண்டாலும், கன்னமும் முகமும் பெரிதாகக் காட்டும், இதற்கு கறிவேப்பிலை ஜுஸ், வாழைத்தண்டு, முள்ளங்கி இவற்றை வேகவைத்த தண்ணீர் போன்றவற்றை அருந்துவது அருமருந்து. அவை முகத்தில் உள்ள நீரை வற்றச் செய்து, முகத்துக்கு சீரான வடிவம் கொடுக்கும்! 

ராஜம் முரளி 
மூலிகை அழகு கலை நிபுணர் 
போன்:044-24852196 
www.rmherbals.in
http://www.maalaimalar.com/2014/04/05133631/cheeks-simple-beauty-tips.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக