வெகு தொலைவு ஓடுபவர்களும், தேகப் பயிற்சியே செய்யாதவர்களும் குறைந்த வாழ்நாளை வாழ வேண்டுமென்று சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவாக ஓடுவது தேகத்திற்கு நல்லதல்ல. அதே சமயத்தில், மிதமாக ஓடுதலும், விரைவாக நடக்கும் பயிற்சியும் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் தேகப்பயிற்சிகள் ஆகும்.
அமெரிக்க தேகப் பயிற்சி வல்லுனர்களின் கருத்துப்படி, மிதமான தேகப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் வெகுநாள் வாழ்வதுடன், நீண்ட ஆயுட்காலங்களை ஆரோக்கியமாகக் கழிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
நியூயோர்க்கிலுள்ள இருதய ஆராய்ச்சி கழகம், 3800 ஓடும் நபர்களை சோதனை முறையில் ஆராய்ச்சி செய்து இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது.
44 வயதுள்ள ஆண்களும், பெண்களும் இந்த ஆராய்ச்சியில் தானாகவே வந்து பங்கேற்றுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் அவர்களது இரத்த அழுத்தம், மற்றும் அவர்களது உயர் இரத்த கொழுப்பு போன்றவற்றை சோதித்தறிந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் விளைவாக, அவர்கள் கண்டுபிடித்த உண்மை என்னவென்றால், மிக வேகமாக ஓடுபவர்களும், மிகுந்த தூரம் ஓடுபவர்களும், தனது உடலில் பாகங்களில் அதிக தேய்மானங்கள், எலும்புகளிலும், தசைகளிலும் ஏற்படுவதால் குறைந்த காலம் மட்டுமே வாழ முடியும்.
ஆனால், அதே சமயத்தில், மிதமாக ஓடுபவர்களும், நடைப் பயிற்சி செய்பவர்களும் மிதமான தேகப் பயிற்சி செய்பவர்களும் நெடு நாட்களுக்கு ஆரோக்கியத்துடன், கூடிய நீண்ட ஆயுட்காலத்தைப் பெறுவர் என்பதை இந்த 3800 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு விளக்குகின்றது.
English Version
Jogging could actually be BAD for you: Scientists find people who run a lot have shorter lifespans
Research showed that people who do a lot of running, and those who do none, both have shorter lifespans than those who do a moderate amount of exercise
Couch potatoes have often argued exercise is a waste of time.
But new research backs them up and suggests jogging may be UNHEALTHY.
Scientists in the USA found that the people who live for the longest are those who only do a moderate amount of exercise.
This amounts to two to three hours of running a week.
But the research showed that people who do a lot of running, and those who do none, both have shorter lifespans.
The researchers are unsure why this is but say it does not seem to be related to heart health.
The researchers, from the Cardiovascular Research Institute at the Lehigh Valley Health Network, in Pennsylvania, studied more than 3,800 runners.
The participants were both men and women and had an average age of 46.
Nearly 70 per cent of the participants said they ran more than 20 miles a week.
The researchers took into account what medication the people were taking and also whether they had high blood pressure, high cholesterol or a history of smoking.
They found that none of these factors could be used to explain why the people who ran the furthest had shorter lifespans.
Dr James O'Keefe, who reviewed the research, believes the findings could be caused by 'wear and tear' on the bodies of people who do a lot of running.
He advises people to aim for about two and a half hours of slow to moderate paced running a week.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக