தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஏப்ரல், 2014

வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைக்க!!


இன்றைய காலகட்டத்தில் நிறைய அபார்ட்மெண்டுகள் வந்துவிட்ட நிலையில், பெரிய அளவில் தோட்டம் அமைப்பது என்பது இயலாத காரியம்.
ஆனால் இருக்கும் இடத்திலேயே தொட்டிகளில் மிக எளிதாக காய்கறிகளை வளர்க்கலாம்.
முள்ளங்கி
முள்ளங்கியானது எளிதில் தொட்டியில் வளரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. ஆகவே நல்ல அகன்ற தொட்டியை வாங்கி, அதில் முள்ளங்கியின் விதைகளை தூவிவிட்டால் போதும்.
ஆனால் தொட்டியில் உள்ள மண்ணானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இப்படி வைத்துக் கொண்டால், ஒரு மாதத்தில் முள்ளங்கி செடியின் வளர்ச்சியை நன்கு காணலாம்.

குடைமிளகாய்
குடைமிளகாய் கூட தொட்டியில் வளரும். ஆனால் இந்த செடி வளர்வதற்கு தொட்டியானது நன்கு பெரியதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் 5 கேலன் அளவுள்ள தொட்டியில் 1-2 செடி தான் வளரும்

வெங்காயத்தாள்
வெங்காயத்தாளானது 5 கேலன் அளவுள்ள தொட்டியில் நன்கு வளரக்கூடியது. இதிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை வளர்த்து வந்தால் சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

லெட்யூஸ்
இந்த பச்சை காய்கறியானது தொட்டியில் ஈஸியாக வளரும். அதற்கு தொட்டியில் உள்ள மண்ணில் விதையை பரப்பி, தேவையான அளவு தண்ணீரை அவ்வப்போது ஊற்றி வர வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான மண்ணில் லெட்யூஸ் ஈஸியாக வளரும்.

தக்காளி
நிச்சயம் இந்த காய்கறியானது அனைத்து வீடுகளிலும் இருக்கும். அதிலும் இந்த செடியை தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், குட்டையாக வளரக்கூடிய தக்காளி செடியின் விதையை தூவி வளர்க்கலாம்.

பீட்ரூட்
அனைத்து வகையான பீட்ரூட்டும் தொட்டியில் நன்கு வளரக்கூடியதே.
இருப்பினும் சிவப்பு நிற பீட்ரூட் தான் வேகமாக தொட்டியில் வளரும்.
ஆனால் இதை வளர்க்க வேண்டுமானால், தொட்டி பெரியதாகவும், 12 இன்ச் ஆழமாகவும் இருக்க வேண்டும். இதனால் பீட்ரூட்டானது எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக