தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாததை சொல்லுமளவுக்கு ஞானக்கண்கள்!!

நாப்பது இலட்சம் தமிழர்கள் சகோதர சண்டையில் உயிர் இழக்கவும் பதினெட்டு இலட்சம் பெண்கள் விதவை ஆகவும் காரணமாய் இருந்த கிருஷ்ணருக்கும் திரவுபதைக்கும் கோவில் கட்டிய தமிழர்கள் தான் நாம் ,என்பதை பல சந்தர்பங்களில் மறந்து விடுகின்றோம்,,,,,,,,,,,
ஆமாம் இராமாயண யுத்தத்தில் பல கோடி தமிழர்கள் இறந்தார்கள் என்கின்றது இதிகாசம் ,,,,,,,தென்னிந்திய தமிழ் மன்னன் வாலியின் பெரும்படையை கொண்டே இராவணனை வட நாட்டு இராமன் அழித்தான் ,,,,,,,அந்த வடநாட்டவனுக்கு தமிழ் நாட்டில் கோவில் கட்டியவர்கள் நாம் ,,,,,இராவணன் மேலது நீறு ,,,,,,என்று பாடி அவனை கொன்ற இராமனுக்கு அன்று கோவில் கட்டினோம் ,,,,,,

தென்னிந்திய தமிழ் மன்னன் வாலியின் பெரும்படையை கொண்டே ஈழத்தமிழன் இராவணனை வட நாட்டு இராமன் அழித்தான் ,,,,,,,அந்த வடநாட்டவனுக்கு தமிழ் நாட்டில் கோவில் கட்டியவர்கள் நாம் ,,,,,இராவணன் மேலது நீறு ,,,,,,என்று பாடி அவனை கொன்ற இராமனுக்கு கோவில் கட்டி வணங்கி கொண்டு தமிழன் என்று நாம் பெருமை பேசுகின்றோம் ,,,,,,,,,,நாம் தமிழ் தாய் தந்தையரை மட்டும் அநாதை இல்லங்களில் விடவில்லை. தமிழையும் தமிழர் கலாசாரங்களையும் பண்பாடுகளையும் அநாதை இல்லங்களில் விட்டு விட்டோம் ,,,,,,,,,,வேற்று இனத்திடம் இருந்து தொற்றி கொண்ட மொழியையும் கலாசாரங்களையும் பின்பற்றி வாழ்கின்றோம் ,,,,,,,,,,,

Kahunthan Thangarajah இராமருக்கும் தான்,இலங்கையில் அழிவை ஏற்படுத்தி வைத்தவர் இராமர் தான்


அவ்வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாததை சொல்லுமளவுக்கு உங்கள் ஞானக்கண்கள் இருக்கின்றனவே,உங்கள் தலைவருக்கு நடக்கப்போவதை சொல்லியிருக்கக்கூடாதா?!துரோகிகள் யாரென்று இன்றாவது உங்கள் ஞானக்கண்களால் கண்டு தமிழரை காப்பாற்றக்கூடாதா?உங்கள் அண்ணன் சரணடைந்தாரா,சண்டையில் வீரச்சாவடைந்தாரா,தப்பியோடினாரா என்றெல்லாம் அறிந்து சொல்லுங்களேன்!!1983இல் இருந்து இன்றுவரை நடைபெற்ற சம்பவங்களையே திரித்து நாமிருக்கும்போதே புனை கதைகள் பேசப்படுகையில் வால்மீகியும் வியாசரும் வரவா போகிறார்கள் கதையின் உரிமம் பற்றி பேசவும்,திரித்து எழுதுவதற்கு வழக்கு போடவும்!!இன்று தோன்றி இன்றே நம்மால் அழிவடைந்த இயக்க வரலாறே பக்கசார்பாக புனையப்பட்டு தலைவன் முருகனின் அம்சம்,சூரியனின் அம்சம்,கரிகால சோழன் என்று பாடியவர்கள் இராமாயணத்தை,மகாபாரதத்தை நாசமாக்காமல் இருந்தாலே அதிசயம்!!ஆனால் ஒன்று மட்டும் உண்மை அன்று தொட்டு இன்று வரை நாம் சகோதர யுத்தத்தாலும் வால்பிடிப்போரின் அட்டகாசத்தாலுமே அழிந்தோம்!!இடம் கிடைக்கமுதலே பதவிக்கு போட்டியிட்டும் உயர் பதவியில் இருப்போரை நியாய அநியாயமின்றி  தொழுதவர் தாமே நாம்!உண்மை தெரியாமல் போராட்டப்பாதையை அழிவை நோக்கி திருப்பி அமரிக்க சதிக்கு உடன் போனவர்களை  தமிழன் புகழ் பரப்பி தமிழை வளர்த்த சோழனுக்கு இணையாக உயர்த்தி பாடியவர்கள்தானே !!சோழனைக்கூட பார்ப்பனனுக்கு,ஆரியனுக்கு துணைபோனவன் என்று தூற்றும் ஆங்கில அடிமைகள் இருக்கும்வரை நம் தமிழினம் தெலுங்கரின் அடிமை!!மலையாளிகளின் தொண்டர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக