வந்தவாசியை விஜயநகர பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த தமிழ் வன்னிய நாயக்கரான சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கடாத்திரி மற்றும் அய்யப்பன் ஆகியோரிடம் இருந்து 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட பகுதியே "சென்னப்ப நாயக்கர் பட்டினம்" என்று அழைக்கப் பட்டது.
சென்னப்ப நாயக்கர் மகன் அய்யப்ப நாயக்கரின் பெயரில் இருந்தே "அய்யப்பன் தாங்கல்" என்னும் ஊர் வழங்கப்படுகிறது.. தற்போதும் இவரின் வாரிசுகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கேட்டால் கூட சொல்வார்கள் சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழ் வன்னிய நாயக்கர் என்பதை.
விஜய நகர தெலுங்கு நாயக்கர் பிரதிநிதியாக இருந்த ஒரே காரணத்துக்காக சென்னப்ப நாயக்கரை "தெலுங்கர்" என்று விவரம் அறியாத சிலர் கூறி வருகின்றனர். மேலும் சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னப்ப நாயக்குடு என்று வேறு எழுதி வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்க தக்கது. சென்னையில் "நாயக்கர்" என்பது தமிழ் நாயக்கரான வன்னிய குல க்ஷத்ரியர்களையும். நாயுடு என்பது தெலுங்கு நாயக்கர்களையும் குறிக்கும். தெலுங்கு நாயக்கர்கள் தமிழ் பேசும் பகுதிக்குள் வருவதற்க்கு முன்பில் இருந்தே வன்னியர்கள் "நாயக்கர்" என்று அழைக்கப்பட்டதாலே. நிறையத் தமிழ் சாதி மக்கள் விஜய நகர மன்னர்களின் பிரதிநிதியாக இருந்த போதிலும் வன்னியர் மட்டுமே தமிழ் சாதிகளில் "நாயக்கர்" பட்டத்தினை தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
"நைனா" என்று தந்தையை அழைக்கும் வழக்கம் வன்னிய நாயக்கர், வன்னிய ரெட்டியார்களிடம் இன்று வரை உள்ளது. மேலும் சென்னையில் தமிழை கற்க்கும் முன் தெலுங்கு கற்பது ஒரு காலத்தில் கட்டாயமாக இருந்தது. எனவே வன்னியர்களும் தெலுங்கு பேசுவர். பாரதிதாசன் சொன்னது போல எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..இங்கு பிறப்பினும் அயலன்அயலனே .....
வளர்க சென்னை..வாழ்க அதன் புகழ்...
Kabeer Vavanan மதராஸ் அல்லது மெட்ராஸ் என்று தான் முதன் முதலில் இந்த நகரம்அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் இங்கு வந்து இறங்கி கோட்டையை கட்டி வைத்த பெயர் மெட்ராஸ் அல்லது மதராஸ் அல்லது மதராசப்பட்டினம். சென்னைபட்டினம் அல்ல.
இந்த பெயர்காரனத்தை வலுவூட்ட இங்கு நான் வரலாற்றுப் பூர்வமான மூன்று காரணிகளைத் தருகிறேன்.
1. சோழர்கள் ஆட்சிகாலத்தில் தொண்டைநாடு என்ற இந்தப்பகுதியை நிர்வகிக்க, ராஜேந்திர சோழன் காலத்திற்கு பின் தன்னாட்சி கொண்ட ஒரு பகுதியாக மாதரசன் என்ற ஒரு சோழ மன்னன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இடம் "மாதரசன்பட்டினம்" தான் தற்போதைய மெட்ராஸ். ஆங்கிலேயர் இங்கு வந்தபோது அவர்கள் இறங்கிய இடமும் தற்போதைய கோட்டை இருக்கும் இடமும்தான் அது. அதனால் தான் ஆங்கிலேயர் இதை மதராஸ் என்று அழைத்தனர். இந்த தகவல் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்து பதியப்பட்ட ஒரு தகவல்.
2. இந்த காரணி சோழர் காலத்திற்கு முன் சென்று பல்லவர் காலத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இடம் பெற்ற ஒன்று. ஏசுநாதரின் நேரடி சீடர், செயின்ட் தாமஸ் என்ற தோமையர் இங்கு வந்து (கி.பி.1 ஆம் நூற்றாண்டு) பல்லவபுரம் சின்னமலையில் கொலையுண்டு, பின்பு அவர் சாந்தோமில் புதைக்கப் பட்டபின் அவர் கல்லறையை காப்பதற்கு, ஸ்பானிய குடும்பங்கள் இங்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களில் Madra என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணின் பெயரால் உருவான குடியிருப்பு பகுதி, நாளடைவில் Madras என்று அழைக்கப் பட்டது. இது சாந்தோமிற்கு வடக்கில் மெரினாவிற்கு அருகில் அமைந்த இடம்.
3 . இது வெள்ளையர் இங்கு வருவதற்கு முன் ஆற்காடு நாவபின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த நிலப்பரப்பில் மதரசா என்ற பள்ளிக்கூடங்கள் நிறைந்து இருந்ததால், மதராஸ் என்று அழைக்கப் பட்டது என்று காரணியும் உண்டு.
இவையெல்லாம் மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பூர்வீக பெயர் காரணம். ஆனால், பிற்காலத்தில் சென்னப்ப நாயக்கன் மூலம் கோட்டை நிலப்பரப்பு வாங்கப் பெற்றதால் சென்னை என்றும் அழைக்கப் பட்டது.
ஆனால் மதரசப்பட்டினம் என்பதுதான் சென்னப்ப நாயக்கர் பிறப்பதற்கு முன் இருந்து இந்த குடியிருப்பு பகுதியின் பூர்வீகப் பெயர்.
Aps Ashok Kumar இது வெள்ளையர் இங்கு வருவதற்கு முன் ஆற்காடு நாவபின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த நிலப்பரப்பில் மதரசா என்ற பள்ளிக்கூடங்கள் நிறைந்து இருந்ததால், மதராஸ் என்று அழைக்கப் பட்டது என்று காரணியும் உண்டு.
Kabeer Vavanan The deal was struck by Francis Day, his ‘dubash’ Beri Thimmappa, and their superior, Andrew Cogan, with the local Nayak rulers. It is believed that this deal was made on August 22, 1639
துபாஷ் என்று அழைக்கப்படுபவர் ஆங்கிலேயருக்கு மொழி பெயர்ப்பாளர். பெர்ரி. திம்மப்பா என்பவர் சென்னப்ப நாயக்கருக்கும் ஆங்கிலேயருக்கும் மொழிபெயர்பாளராய் இருந்துள்ளார். திம்மப்பா என்பவர் பெல்லாரியை சேர்ந்தவர்.
The English East India Company obtained Royal Charter from queen Elizabeth on 31st December 1600 to trade with India. In 1639 Francis Dey obtained the site of Madras from the Governor of Chandragiri.
நீங்கள் வந்தவாசியை நிர்வகித்த நாயக்கரிடம் இருந்து பெற்றதாய் பதிந்து இருக்கின்றீர்கள். சந்திரகிரி ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக