தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மொழிகளுக்கான வரலாறு இப்படித்தான் இருக்குமோ?!

"எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு`
-------------------------------------------------
In paleogeography, #Gondwana, originally#Gondwanaland, is the name given to the more southerly of two supercontinents which were part of the Pangaea supercontinent that existed from approximately 510 to 180 million years ago . இந்த#கொன்ட்வானா கண்டம் ஆபிரிக்கா, இந்திய உபகண்டம், #ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய நிலப்பரப்புகள் ஒன்றாக இருந்த காலப்பகுதியில் அந்த நிலப்பரப்பிற்கு இடப்பட்ட பெயராகும். அதுமட்டுமல்ல அந்த கொண்ட்வானா கண்டத்திலேயே பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு மனிதன் உட்பட்ட பல விலங்குகள் தோன்றியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பின்னர் அந்த பெரு நிலப்பரப்பு உடைந்து பல கண்டங்களாக அணுஅணுவாக வெவ்வேறு திசைகளில் நகரத்தொடங்கின. பின்னர் உடைந்த பெருநிலப்பரப்பில் ஒரு துண்டு#லெமுரியா (#குமரி கண்டம்)எனப்பட்டது. அதிலும் பல ப்குதிகள் அமிழ்ந்துபோக எஞ்சிய துண்டு இந்திய உபகண்டமாக#லோரேசியா(#Laurasia ) பெரு நிலப்பரப்புடன் இணைந்தது. ...... இப்போது ஆபிரிக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ளவர்களின் தோற்றம் மொழி ஆகியவற்றையும் இந்திய உபகண்ட மக்களின் மொழி, உருவங்களையும் , ஆஸ்திரேலியாவின் பழங்குடிகளையும், தெனமெரிக்க பழங்குடி மக்களையும் இணைத்துப்பார்த்தால் சில உண்மைகள் உங்களுக்குப் புலப்படும்.

****************** முதலில் மனிதன் தோன்றினான் .. பின்னர் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும், உணர்வுகளை , உணர்ச்சிகளை தெரிவிக்கவும், கருத்துகளை பரிமாறவும் ஒலிகளை உருவாக்கினான். பின்னர் கூட்டம் கூட்டமாக வாழந்த மனிதர்கள் வெவ்வெறு ஒலிக்குறிப்புகளை பயன்படுத்தி பரிமாறினர். தமது சந்ததிகளுகும் அதைச்சொல்லிக்கொடுத்தனர். பின்னர் சிறிய சிறிய ஒலிகள் தேவைகளுக்கேற்ப சற்று நீண்ட ஒலிகளாக(சொற்களாக) விரிவடைந்தன. பல மனிதக்கூட்டங்கள் இயற்கையாலும், நோய்-பிணிகளாலும் ஏனைய விலங்குகளாலும் அழிந்த போது பல ஒலிக்கூட்டங்களும் அழிந்திருக்கலாம்.

பின்னர் மனிதனின் அறிவு வளர ஒலிக்குறிப்புகள் மொழிகளாக பரிணமித்தன. அந்த ஒலிக்குறிப்புகளை /கூட்டங்களை கல்லிலும் , மண் தகடுகளிலும், உலோகங்களிலும் பதிவு செய்ய குறியீடுகளை உருவாக்க்கினர். அதுவே எழுத்துகளாக வளர்ச்சி அடைந்தன. பின்னர் ஒவ்வொரு மனிதக்குழுக்களும் குறித்த மொழியை செம்மைப்படுத்த சில விதிமுறைகளை வகுத்தனர். அதுவே மொழிகளுக்கான இலக்கணமாயிற்று. மொழிகளில் வலியன/தக்கன பிழைத்துக்கொண்டன. இதுதான் உண்மையாக இருக்கக்கூடும்.
---------------------------------------------------------------

நன்றி

http://www.britannica.com/EBchecked/topic/238402/Gondwana
http://www.amnh.org/ology/features/plates/
http://www.cotf.edu/ete/modules/msese/earthsysflr/plates1.html
http://csep10.phys.utk.edu/astr161/lect/earth/tectonics.html
http://www.enchantedlearning.com/subjects/astronomy/planets/earth/Continents.shtml
http://www.nhm.ac.uk/nature-online/life/human-origins/
http://www.britannica.com/EBchecked/topic/275670/human-evolution
http://www.latimes.com/news/science/sciencenow/la-sci-sn-ancient-shellfish-human-evolution-20130618,0,7529277.story
http://en.wikipedia.org/wiki/Origin_of_language
http://www.howstuffworks.com/life/evolution/language-evolve.htm
http://scholar.google.co.uk/scholar?q=language+evolution+and+human+development&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ei=_9HBUaDJMM_34QSflICIDA&ved=0CCsQgQMwAA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக