தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

* மாவீரன் நெப்போலியன் *


உலக வரலாற்றில் வீர சாகசம் செய்த மாவீரர்களில் இவரும் ஒருவர் இன்றும் வீரத்திற்கு உதாரணமாக அனைவராலும் அடையாளங் காட்டப்படுபவர் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன் ஆவார். கடந்த 1769 ஆம் ஆண்டு கார்சிகா எனும் தீவில் வழக்கறிஞர் ஒருவருக்கு மகனாக பிறந்தார் நெப்போலியன் குள்ளமான உருவம், சிறிய கண்கள், அளவுக்குமீறிய நீண்ட காதுகள் உடையவராக நெப்போலியன் காணப்பட்டார். பள்ளிப் பருவத்தில் பெரிதாக கல்வியில் சோபிக்காத அவர் வகுப்பிலுள்ள 58 மாணவர்களில் 42 ஆவது மாணவராக தரப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தனது படிப்பிற்கு பின்னர் இராணுவத்தில் சேர்ந்த நெப்போலியன் கடந்த 1785 ஆம் ஆண்டு இராணுவ துணைத்தலைவனாக பதவியேற்றார். நாட்டில் அவ்வப்போது ஏற்படும் கலவரங்களை அடக்குவதில் தன் திறமையை காட்டிய நெப்போலியன் பிரான்ஸ் நாட்டு அரசரின் நன்மதிப்பை பெற்றார். அதற்கிணங்க கடந்த 1796 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவுக்கு சொந்தமான இத்தாலிய பகுதிகளை பிடிப்பதற்கு அனுப்பப்பட்ட மாவீரன் நெப்போலியன் வீரம், இராஜதந்திரம், புதிய முறைகள் இவற்றினை பயன்படுத்தி சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடினான் அதன் காரணமாக பிரான்ஸ் நாட்டு மக்களின் உள்ளங்களில் நெப்போலியன் இடம்பிடித்தார். இந்நிலையில் நெப்போலியனின் பார்வை இங்கிலாந்து நாட்டை நோக்கி திரும்ப கீழைத்தேய நாடுகளுடன் இங்கிலாந்து கொண்டிருந்த தொடர்புகளை துண்டிக்கும் நோக்குடன் எகிப்து மீது படையெடுத்தான்...................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக