* வாஸ்கோடகாமா *
புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ, அகலங்களை அலசுவதிலும், ஐரோப்பியர்களே முன்னோடிகள் என்பது வரலாறு கூறும் உண்மை. இவ்வாறு ஐரோப்பியர்கள் தங்கள் நாடு காணும் பயணத்தை பரந்தளவில் மேற்கொள்ளும்போது ஆசியாவில் பல நாடுகளை அடையாளங் காட்டினர். அந்தவகையில் நவரத்தின கற்கல், மிளகு, கராம்பு உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆசிய நாடுகளில் பரந்து காணப்பட்டன. அதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை அடையாம் கண்டு அங்கிருந்த இவ்வாறான பொருட்களை தமது நாட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஆசைகொண்ட ஐரோப்பியர்கள் ஆசியா மீது தமது ஆசையை வளர்த்துக்கொண்டனர். அதன் விளைவாகவே இந்தியா மீதான ஐரோப்பியர்களின் பார்வை அதிகரித்தது. இந்நிலையில் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்து விட்டால் தமது வாணிப நடவடிக்கை சுலபமாக இருக்கும்மென எண்ணிய ஐரோப்பியர்களின் கனவை நனவாக்கியவர் இவர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்து வரலாற்று தடம் பதித்துக்கொண்ட போர்த்துகீச நாடுகாண் ஆர்வலர் வாஸ்கோடகாமா. கடந்த 1460 ஆம் ஆண்டு போர்த்துக்கலின் சின்ஸ் எனுமிடத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை எஸ்டேவோ டா காமா. இந்தியாவிற்கு கடல் மார்க்கத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆசையை இவரது தந்தை முயன்றபோது அது பலனளிக்கவில்லை. தந்தை மரணத்தின் பின்னர் போர்த்துகீசிய மன்னரால் நாடுகாண் ஆர்வலர் பணியை வாஸ்கோடகாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக