தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 ஆகஸ்ட், 2013

இந்தியரை அடிமைப்படுத்திய இஸ்லாமியர் இந்திய சுதந்திரத்துக்கு கிறிஸ்தவரை எதிர்க்க உதவியதை மறைத்த வரலாறு!!

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்... மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்... கூகுள் பிளாக்கர்... சமூக வலைத்திரட்டிகள்... என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..! அத்துடன்... இந்த பதிவு... சிலரின் கடும் உழைப்பு..! முக்கியமாக வரலாற்றினை தேடி எடுத்து எழுதிய பேராசிரியர் மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்., அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னாரின் அளப்பறிய பங்குக்கு... அல்லாஹ் இவருக்கு பேரருள் புரிந்து நற்கூலியினை அளிக்க பிரார்த்திக்கிறேன்..! அடுத்து... கீற்றுவில் எழுதிய (திப்பு சுல்தான் பகுதி) சகோ.முத்துப்பேட்டையாருக்கும்,  சகோ.சுவனப்பிரியன் ('தாதா அப்துல்லாஹ் கம்பெனி' ஜவேரி சகோதரர்கள்) சகோ.அப்துல்லாஹ் (குஞ்சாலி மரைக்காயர் மற்றும் பல) சகோ.யூசுப் கான்  (நேதாஜி லிஸ்ட்) அவர்களுக்கும் மிக்க நன்றி..! இவர்களுக்கு இறைவனின் பேரருளும் நற்கூலியும் கிட்டட்டுமாக..! ஆமீன்..!



கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஸ்பான்சர் செய்தது யார்....?
நேதாஜிக்கு ராணுவம் அமைக்க ஆயுதம் வாங்க எல்லாம்... ஸ்பான்சர் யார்....?
காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வர வைத்த ஸ்பான்சர் யார்....? 
காங்கிரசின் சுதேசி கதர் ஆடை யார் கண்டுபிடித்தது...?
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
---------இதுபோல நாம் இதுவரை சிந்திக்காத... நாம் அறியாத ஆச்சர்யங்கள் இன்னும் எக்கச்சக்கம்..!


1. முதன்மையாளர்கள்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.


வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்...! இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி 'முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்' எப்போதாம்..?
1857..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்...?
ஏன்... இந்த வரலாற்று திரிபு..???

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

 

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால்.

நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.  இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.  ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.

சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது.  1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம்.

இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.  ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது.

கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.  கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

தெற்கின் முதல் போராளி

தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,


மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…

- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.*
(* செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36)

கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய MOOKAH என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்**.

இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
(** செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.38)

ஹைதர்  அலி & திப்பு சுல்தான்..!
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் ஹைதர் அலி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை பிரிட்டிஷ் படையுடன் வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டார்..! 18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன், மாவீரன் திப்பு சுல்தான்ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..? 

1799 ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவ‌ர்க‌ள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்..!

திப்புவின் பீரங்கிகள் பிரபலமானவை..! அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் பிரதானமாணவை..!

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது தி ப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.


சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிககை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார். 

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும். 

கிளிங்கர்கள்

மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால்அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு ஒன்று ழிந்திருக்கின்றது.

தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டது வரலாறு..!மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.

அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர்.நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அக்கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவான சேக் உசேன் எனற இஸ்லாமிய இளைஞர்*.

யார் இந்த சேக்உசேன்?

(* Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan)மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.* ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்**
(* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.* இம்மண்ணின் விடுதலைக்காக ஜமா’அத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.**

இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.
(* செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.)
(** K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.)

1. முதன்மையாளர்கள்

சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும். இதனை சிப்பாய் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்..!

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு.... பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.

நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது.

ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும். 1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*

இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள்ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும்சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.**

(* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63)

மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உரைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.

அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவிரப்பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர்.

(* மேற்படி, பக்கம். 63-64)

அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர். அவமாப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! - என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும்ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.** நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10)
(** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான - கொல்லப்பட்ட -தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.

இஸ்லாமியர் நடத்திய அரசுகள் - அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர் இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக - கூலிகளாக - ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்

இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர வேண்டும். அது காலத்தின் தேவை.

ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.

இவ்வாறு இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போரான சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் - அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் - அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களே என்பது வீரசாவர்க்கர் போன்றோர் தரும் வாக்கு மூல உண்மையாகும்.

பகதுர்ஷா..!

ஒரு பிடி மண்

பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏறினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.



1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், "என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.

பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது. 
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.*

தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு - போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

... ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.

...ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.

ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.

தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.

மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். 

ஒரு நாள் காலை... 

காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது.

உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.

ஹட்ஸன்: பகதுர்ஷா...! நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை!

என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... தட்டில்... உணவுக்கு பதில்.... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள் இருந்தன..! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன்.

திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...

பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு ...

ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?

பகதுர்ஷா: ஹட்ஸன் ... அரசர்கள் அழுவதில்லை!

என்று பெருமிதத்துடன் ஷா கூற...
தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்.*


அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த மகன்களின் முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்... தனியாய்... காலை உணவாக...! பெற்ற மனம் எப்படி பதறி இருக்கும்..? அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பேரரசர் பகதுர்ஷா ஜாஃபர் துளியும் கலங்கவில்லை..!

* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.

சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. "என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.

தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்துஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,*அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, "நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்..!- என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே ... ஒருதூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(* அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)

முதல் மக்கள் இயக்கம்

காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக - மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா(Haji.Shariathullah) ஆவார்.

வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (Karam Shah) வும் அவர் மகன் திப்பு(Thipu)வும் நடத்திய ஆன்மிக - அரசியல் இயக்கம்தான் இந்த பெரய்ஸி இயக்கத்துக்கு முன்னோடி. ஜமீன்தார்களின் கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடிய திப்பு, 1825 -இல் செராபூர் பகுதியைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தார். ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி கோரா மலைப் பகுதிவரை தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தினார். 1830 - களிலும் 1840 - களிலும் இப்பகுதிகள் ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்த - பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் திகழ்ந்தன.* இவ்வியக்கத்தின் தாக்கம்தான் கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவைப் போராடத்தூண்டியது.

பிரிட்டீஷாருக்கு வரிவசூல் செய்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமீன் அமைப்பில் , ஆளுவோரின் பிரதிநிதிகளான ஜமீன்தார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலகட்டம், கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக்கொண்டிருந்தனர்.

உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தத்தோமியானும் நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது.** கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தத்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 - இல் தூக்கிலிடப்பட்டார்.

சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை புதிய வரலாறு பதிவு செய்யட்டும்.

(* B.L. Grover,S.Grover, A New Look at Modern Indian History, P.248. **lbid.,P.248)

முதல் சுதந்திரப் பிரகடனம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 - இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) - என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj) - என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார்.* அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.

நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர். (* lbid.,P.665)

இந்திய வஹாபி இயக்கத்தின் தலைவர் சையது அஹமது ராய்பரலி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அச்சாதனையை நிகழ்த்தினார். மய - சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது. ஹாஜ் சரியத்துல்லா, தத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.* *(lbid. P.248..)

பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட செய்யது அஹமது ராய்பரலி, இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது 'இஸ்லாமியர்களின் உலகம்' என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார். இச்சுதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், 'இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்'.

செய்யது அஹமது ராய்பரலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம். பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.

கிளர்ச்சியில் ஈடுபட்ட மௌல்வி. முஹம்மது ஜஃபிரை ஆங்கில அரசு கைது செய்து, தேசத்துரோக தண்டனை விதித்து அந்தமானுக்கு நாடு கடத்தியது. அவர் அந்தமானில் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். 1870 - இல் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான அமீர்கானும் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரை அந்தமானுக்கு நாடுகடத்தும் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி நார்மனை அப்துல்லா என்ற முஜாஹித் இளைஞன் சுட்டுக்கொன்றான். இதுபோன்ற பல வீரவரலாறுகள் இச்சுதந்திர அரசின் நடவடிக்கையில் உண்டு.

இதுபோன்றே 1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசுக்கென கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தானங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.

இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.

2. மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்

கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.-மௌலானாஅப்துல் ஹமீது பாக்கவி.


ஒரு மனிதன் ஒரு பட்டாளம்

மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அறியாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. - என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்டதியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.*

சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பதற்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது'' - என்றார். ஆங்கில அரசு விதித்திருந்த 
பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)

கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 - இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.

ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.

ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.

கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.

அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது:புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.* (* வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)

அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.


அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட... தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார்அஹமதுல்லா ஷாஹ்.

ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர்.
 


மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்பெருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.

ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.

மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி : இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. - என்று குறிப்பிட்டுள்ளது உண்மை ... வெறும் புகழ்ச்சி இல்லை!*
(* ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-61.)


ஒரு வாள் இருபது தலைகள்

மௌல்வி அஹமதுல்லா ஷாஹ் போன்று ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பட்டாளத்திற்குரிய முழு பராக்கிரமத்துடன் திகழ்ந்த மற்றொரு மார்க்க அறிஞர் மௌல்வி மிர்ஜா மஹ்தீ சாலிஹ் சிறந்த போர்க்கலைப் பயிற்சியாளராகத் திகழ்ந்த மிர்ஜா மஹ்தீ, முஃத்தீகன்ஞ் பகுதியைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர். இவரது முஃத்தீகன்ஞ் எல்லைக்குள் ஆங்கிலேயர் நுழைந்தால் அவர்களது தலை தப்பாது.

1858 - இல் இவரை வீழ்த்துவதற்காக கௌகாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலப் படை மிர்ஜா மஹ்தீயின் எல்லைக்குள் நுழைய முடியாமல் தத்தளித்தது. பல நாள் முற்றுகைத் தொடர்ந்தது. ஒரு நாள் அதிகாலை பஜ்ரு தொழுதுவிட்டு பள்ளிவாயிலை விட்டு மிர்ஜர் மஹ்தீ வெளிவர, ஆங்கிலப் படை அவரைச் சூழ்கிறது. னி நபராக நின்று 20 பேரை வெட்டி வீழ்த்தி இறுதியில் எதிராளியின் குண்டுகளை மார்பில் தாங்கி சாய்கிறார். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்தபோது, அவர்களது ஜனாஸா (இறந்த உடல்)வைப் பொதிந்த கபன்துணி (சவத்துணி) முழுக்க இரத்தக்கறைப்படிந்திருந்தது உண்மை வரலாறாகும்.

பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

1929 – ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை – என்ற கோசத்தை
வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,
P.426.)

1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்.

மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.

பூரண சுயராஜ்யம் (Complete Indepedence Nation) தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேற்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம்நிறைவேற்றப்படாமல் போயிற்று.*
(* Young India, May 4 , 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothers, PP.159-
60, 164-65.)

ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.


ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 - இல் கிலாபத் கமிட்டித் தலைவராகவும், 1924 - இல் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டுத் தலைவராகவும் இருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1921 அஹமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் தான் எழுப்பிய பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்

மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள், தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாகஉருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்கழித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தண்டனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாரிசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.


தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சிறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது !*
செக்கிழுத்த செம்மல் ஹஜ்ரத் மொஹானி என்று இனியாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும். (*சிராஜுல் மில்லத் அ.க. அப்துஸ் ஸமது, இஸ்லாமிய தமிழர் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா உரையில், சென்னை. 18.10.1997)

ஃபத்வா

தென்னகத்தில் இயங்கி வந்த அரபிக் கல்லூரிகளும் மதரசாக்களும் அன்று தேச விடுதலைப் போராட்டக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இந்நிறுவனங்களில் பணியாற்றிய உலமாக்கள் ஆங்கில அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 1831 மே 6 - இல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.
தேச விடுதலைப் போராட்டம் மார்க்க அமல் (வழிபாடு) தொடர்பானது – என்ற தேசாபிமான முழக்கங்களுடன் ஆங்கிலேயருக்கு எதிராக எழுதியும் பேசியும் தங்கள் சுதந்திரப் பங்களிப்பைத் தந்த தேவ்பந்த் உலமாக்களின் ங்கு மகத்தானது. ஆங்கிலேயர் மீதுள்ள வெறுப்பினை அவர்களது மொழியின் மீதும் காட்டினர். ஆங்கிலம் படிப்பது ஹராம் - என்று தேவ்பந்த் உலமாக்கள் பத்வா(மார்க்கத்தீர்ப்பு) கொடுத்தனர்.

அந்நியப் பொருட்களைப் பரிஷ்கரிக்க வேண்டும் சுதேசிப் பொருட்களையே வழங்கவேண்டும் என்ற காந்திஜியின் சுதேசி இயக்கம் நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கலாச்சார இயக்கமாக உருவாகியது. இதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம்கள் பிரிட்டீஷாரின் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் (Haram ; Unlawful). 
-1921 ஜுலையில் கராட்சியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டின் தலைமை உரையில் மௌலானா முகம்மது அலி.
*

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்,** கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது – என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றிய உலமாக்களின் சுதந்திர பங்கேற்பு மகத்தானது.

(* Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.)
(** சிராஜுல் மில்லத் அ.க.அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களது தந்தையார்.)

3. விடுதலைப்போரில் வீரமங்கையர்

ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள்குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61)


பேகம் ஹஜ்ரத் மஹல்

1857 - இல் மாமன்னர் பகதுர்ஷ ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

... குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.*
1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.**


பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 – வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்.***
(*மேற்படி.,பக்கம்.253.) - (** மேற்படி,.பக்கம்.354-355) - (*** R.c. AgarWal, Constitution Develapment of India and National Movement, P.43,53)

1858 மார்ச் 6 – ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை

பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*


1938 - இல் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில்:
என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன – என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். (* B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History, P.268.).  - (** தினமணி, 29.04.1938., மறுபிரசுரம்: 29.04.1977.)

 

4. சுதந்திரத்திறகாய் சிறுவர் முதல் முதியோர் வரை...

...மலாயில் நான் ஜப்பானியரிடம் கதியற்ற கைதியாக இருப்பதை விட இந்தியரின் உயிர், சொத்து, மானம்ஆகியவற்றைக்காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் இருந்தால் என் நாட்டுக்கு மிக உபயோகமாக இருப்பேன் என்பதால் இந்திய தேசிய ராணுவத்தில இணைந்தேன். டெல்லி, செங்கோட்டை வழக்கு விசாரணையில் INA கேப்டன் ஷாநவாஸ்கான்.

என் பெயர் விடுதலை !
தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 - இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்கள் மத்தியில் பேசுகிறான். விடுதலை உணர்வை; தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். துகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.

நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி...

நீதிபதி : உன் பெயர் என்ன?
கைர் : "ஆஸாத்" (ஆஸாத் என்றால் 'விடுதலை' என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி : சரி... உன் தந்தையின் பெயர் என்ன?
கைர் : "இஸ்லாம் !"
நீதிபதி : உன் ஜாதி எது?
கைர் : "ஒத்துழையாமை!" (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்...)
நீதிபதி : உனது தொழில் எது?
கைர் : "அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது" (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான்.
புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம் ராஜதுரொகமாகும்.)
நீதிபதி : உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : "எனது பிணையாள் அல்லாஹ் ஒருவன் தான்"
(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன் ...)
நீதிபதி : உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர் : "ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?
நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?"
( என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க... மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)*
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப்பிடிப்பும் விடுதலை உணர்வம் நம்மை ஆச்சர்யத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.
(* டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை(அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சுந்தனைச்சரம், அக்டோபர் 1997.)


பாடலியில் ஒரு புலி
1857 - சிப்பாய் கலகம் வட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலகட்டம் முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவரக்கூடாது என்ற தடை உத்தரவினை ஆங்கில அரசு விதித்திருந்தது. ஒரு நாள் பாடலிபுரம் நகரில் பீர்அலி என்ற இளைஞனின் வீட்டின் முன் தடை உத்தரவை மீறி 200 முஸ்லிம்கள் கூடுகின்றனர்.

கூடிய மக்கள் முன் பீர்அலி எழுச்சிமிக்க உரையாற்றுகிறார். பின்னர் அனைவரும் தேசியக் கொடியைக் கையிலும், விடுதலைக் கோசத்தை நாவிலும் ஏந்தியவர்களாக ஊர்வலமாப் புறப்படுகின்றனர். ஊர்வலத்தினரைக் கைது செய்ய ஆங்கில அதிகாரி லயால் ராணுவத்துடன் வருகிறான். ஊர்வலத்தை வழிமறித்த லயாலை பீர்அலி சுட்டு வீழ்த்துகிறார். நகரெங்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. பீர்அலி கைது செய்யப்படுகிறார்.

ராணுவக் கோர்ட்டில் பீர்அலிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இறுக்கிப் பூட்டப்பட்ட விலங்குகளால் அவர் கைகளிலிருந்து ரத்தம் கசிய இழுத்து வரப்பட்டு தூக்கு மேடையில் நீறுத்தப்படுகிறார். ஒரு பிறவி வீரனுக்குரிய புன்முறுவலுடன் தூக்குமேடையில் நின்ற பீர்அலிக்கு தன் குழந்தையின் ஞாபகம் வர ஒருகண நேரம் அவர்முகத்தில் சோகம் படர்கிறது. இதனைக் கவனித்த அதிகாரிகள், இதுதான் தக்க சமயம் என்று பீர்அலியை, "பீர்அலி... கிளர்ச்சித் திட்டத்தில் இறங்கியுள்ள மற்ற தலைவர்களின் பெயர்களை நீ இப்போது வெளியிட்டால், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!" என்றனர். அதற்கு மறுத்த பீர்அலி,

நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! 
என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார்.

பீர் அலியின் மரணச் செய்தி கேட்டு தனபுரி ராணுவ முகாமில் இருந்த இந்தி சிப்பாய்கள் ஜுலை 25-ஆம் தேதி மிகப்பெரும் புரட்சியை ஆரம்பித்தனர்.

பீர் அலி லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். பாடலிபுரத்தில் புத்தக வியாபாரம் செய்து வந்தார். பாடலிபுரத்தில் தேசபக்தர்களைத் திரட்டி ஆயதங்களுடன் அத்தேசிய வீரர்களைத் தயார் செய்து வைத்திருந்தார். "எந்த நேரத்திலும் தேசவிடுதலைக்காக தங்கள் உயிரையும் இழப்போம்" என்று அனைவரும் பீர் அலியிடம் சத்யப்பிரமாணம் செய்திருந்தனர். பீர்அலியின் மரணத்திற்குப் பின் இவ்வீரர்கள் பாடலிபுரம், தனபுரி பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பழிவாங்கும் மிகப்பெரும் கிளர்சிசியில் ஈடுபட்டனர்.(*வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம் 272-274).

தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு !


ஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவ்விளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஷ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது. 
1925 ஆகஸ்ட் 26 - இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் ணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்லாகான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர  ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால் ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.

கஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார்.

லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரிகொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்லாகான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.

சில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கஃப
ன் ஆடை (சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்!.

- என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக... லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக... குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக ... 26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்லாகான்.* இந்திய விடுதலைப் போராட்ட தீவிரவாத இயக்கத்தின் முன்னோடி ஆவார். (*ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதலை ; பொராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)

தியாக இயக்கத்தினரின் வரிசையில்...
You give me blood and I will give you Freedom

என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுவித்த போது, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நுற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர்.

நேதாஜி 1943 ஜுலை 2 - இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.* மேலும் கரீம் கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.

இதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும், 'விமான விபத்து நடந்தது உண்மைதான்' என்று கூறியவர்.**

 
பிரிட்டீஷாரால் சுரண்டப்பட்டு, அவ்வாறு சுரண்டுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுத்தறிவின்றி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பட்டினி இந்தியர்களின் நிலை கண்டு இரங்கி, தனது உறவினரில் தந்தை முதற்கொண்டு 80 பேர் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொணடிருந்த நேரத்தில், தேசவிடுதலைக்காக நேதாஜி படையில் இணைந்தவர்தான் ஷாநவாஸ்கான்.

1945 - ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. இவ்விசாரணையில் முதலில் உட்படுத்தப்பட்ட மூவருள் ஒருவர் ஷாநவாஸ்கான் ஆவார். மற்றிருவர் கேப்டன் ஸேகால், லெப். தில்லான். இவர்களுக்காக ஜவஹர்லால நேருவும், ஆஸிப் அலியும் வாதாடினர்.

இவ்விசாரணையின் போது ஷாநவாஸ்கான் அளித்த வாக்குமூலம் அன்று தேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'இந்த விசாரணையை பிரிட்டீஷ் அரசு நடத்தியிருக்கக்கூடாது' என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதும் அளவிற்கு, ஷாநவாஸ்கானின் சாட்சியங்கள் போராட்ட நியாயங்களை உறுதி செய்வனவாக அமைந்தன.***


இவ்வழக்கு விசாரணையில் முதன் முதலாக இந்திய தேசிய ராணுவ வீரர் ஒருவர் 23-08-1945-இல் தூக்கிலிடப்பட்டார். அந்த வீர இளைஞனின் பெயர் ஷாகுல் ஹமீது. (* கே. அருணாசலம், ஜெய்ஹிந்த்,பககம்67) (**மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி)ஷ (***மேற்படி பக்கம் 91.)

வைக்கம் வீரன்
இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. "நாட்டிற்கு உழைப்பதனால் எந்த சொந்த லாபத்தையும் நான் பெறமாட்டேன். இந்தியர்கள் யாவும் என் சகோதரர்கள்" - என்ற உறுதி மொழியினை எடுத்துக்கொண்ட, இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாரான இளைஞர்கள் அந்த ஒற்றர் படையில் இருந்தனர்.

இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.



இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு. மா.சு. அண்ணாமலை*

சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக், ஐவருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஃபேரேரா என்ற வீரர் மட்டும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாகத் தண்டனையில் இருந்து தப்பினார். ரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர் : வைக்கம் அப்துல் காதர், பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். (* மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9)

1943 - ஆம் ஆண்டு செப்படம்பர் 10-ஆம் தேதி அதிகாலை இந்நால்வருக்கும் தூக்கு. தூக்கிற்கு முந்திய நாள் இரவு வைக்க
ம் அப்துல் காதர் தேசத்து மக்களுக்கு எழுதிய மடல்:

அமைதியையும் நிர்மலமான மனதையும் அல்லா எனக்கு தந்துள்ளார். நாட்டுக்காக நான் என் வாழ்வை இழக்கிறேன். நீங்கள் உங்கள் மகனான என்னை இழக்கிறீர்கள். நாளை காலை இந்த உயிர் நின்றுவிடும். இந்த கரங்கள் எழுதாது. இதயம் துடிக்காது...நாட்டிற்காக உயிரை விட்ட முழு நிலவினைப் போன்றவர்கள் முன்பு நான் மிகச் சிறிய மெழுகுவர்த்தி ரம்சான் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5-மணிக்கும் 6-மணிக்கும் இடையே நான் மரணம் அடைவேன். இதோ கடிகாரம் 12 அடிக்கிறது. என் மரணத்தின் முதல் கட்டம் ஆரம்பித்து விட்டது. என்றேனும் ஒருநாள் உங்கள் மகன் இந்த தேசத்திற்காகத் தைரியத்துடன் மரணத்தைச் சந்தித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் !


தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள்... சென்னைச் சிறைச்சாலைக் கைதிகள் அனைவரும் 'வந்தே மாதரம்' பாட, வைக்கம் அப்துல் காதர் தன்னோடு தூக்கில் ஏற்றப்படும் மூவருடன் 'பாரத மாதாகி ஜே' என்ற கோசத்துடன் தூக்கு மேடை நோக்கி நடக்கிறார். அப்துல் காதரிடம் 'உனது இறுதி விருப்பம் என்ன?' என்று கேட்கப்படுகிறது. அதற்கு அப்துல் காதர் :

இந்து மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஆனந்தனையும் என்னையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும்! மதங்கடந்த மனிதநேய உணர்வுடன் இம்மண்ணிற்காய் தூக்கிலேரிய அத்தியாகியின் உடல் ஒட்டேரி மைதானத்தில் புதைக்கப்பட்டது.*

தூக்கு கயிற்றின் கண்ணிகளுக்குள் தங்கள் கழுத்துக்களை அரும்புகளாய்த் தொடுத்து, இந்திய தேசத்திற்கு சுதந்திர மாலையான அத்தியாக மலர்களில் வைக்கம் அப்துல் காதர் இந்திய விடுதலை வரலாற்றை வாசப்படுத்தியவர். இனி அவரையும் வைக்கம் வீரன் என்று அழைக்கலாமே ! (* மேற்படி., பக்கம்.9-10.)


4. சுதந்திரத்திறகாய் சிறுவர் முதல் முதியோர் வரை...

அறிஞனின் பேனா
''போர்க்களத்தில் வாள்முனையில் சிந்தப்படும் ரத்தத்துளிகளை விட ஒரு அறிஞனின் பேனாவின் மைத்துளி வலிமை மிக்கது!" - என்றார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இந்த வலிமையை இம்மண்ணின் விடுதலைக்காகப் பயன்படுத்திய அறிஞர் ஒருவர் உண்டு.

1912 - இல் உருது மொழியில் வெளிவரத் தொடங்கிய அல்- ஹிலால் பத்திரிகை மிக வேகமாக சுதந்திரம் பற்றிய பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கியது. அது புதிதாக உபதேசித்த சக்தி வாய்ந்த தேசியம், இம்மக்களைப் பெரிதும் கவர்ந்தது. பாமர மக்களிடையே புரட்சிகரமான பரபரப்பை 'அல்-ஹிலால்' ஏற்படுத்தியது. உருது பத்திரிகை உலகின் சரித்திரத்தில் அல்-ஹிலாலின் வருகை ஒரு திருப்பமாக அமைந்தது.


அலாஹாபாத்திலிருந்து ஆங்கில அரசு வெளியிட்ட பயனீர்; பத்திரிகையின் செய்திகளுக்குப் பதிலாக்கும் முதன்மையான இந்திய பத்திரிகையாக 'அல்-ஹிலால்' திகழ்ந்தது.

'பிரிட்டீஷ் அரசிடம் விசுவாசமாக இருந்து கொண்டு,சுதந்திர இயக்கத்திற்கு வெளியே இருப்பது தான் இந்திய முஸ்லிம்களின் நலனுக்கு ஏற்றது' என்ற கொள்கை உடைய வட இந்திய மேல்தட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான ஒரு கோசத்தை 'அல்-ஹிலால்' முன் வைத்தது.*
மத்திய சட்டசபையில் 'அல்-ஹிலால்' பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததின் காரணமாக ஆங்கில அரசு இப்பத்திரிகையை முடக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் முதல் கட்டநடவடிக்கையாக அல்-ஹ-லால் பத்திரிகை ஜாமின் தொகைக் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன் படி ஜாமின் தொகை கட்டப்பட்டது. இதனை எதிர்பாராத அரசு ஜாமின் தொயை அதிகரித்து மீண்டும் 10 ஆயிரம் கட்ட நிர்பந்தித்தது.இதனால் இப்பத்திரிகையை தொடர முடியாத நிலை ஏற்பட,'அல்-ஹிலால்' காரியாலயமே மூடப்பட்டது.

(* அபுல் கலாம் ஆசாத்,இந்திய விடுதலைவெற்றி (தமிழாக்கம்: ஏ.ஜி. வெங்கடாச்சாரி) பக்கம்இ8.)

இதனால் முடங்கிப் போய் விடாத இப்பத்திரிகையின் ஆசிரியர்,அல்- பலாஹ் என்ற மற்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பத்திரிகை வாசகங்கள் வாசகர் உள்ளங்களில் சுதந்திர ஆவட்கையை பற்றவைக்கும் அக்னி குஞ்சுகளாக இருந்தன. இதனால் மிரண்டுபோன ஆங்கில அரசு பஞ்சாப்,தெஹ்லி,பம்பாய் மற்றும் ஐக்கிய மாகாணங்களிலும், ஏன் பத்திரிகை அச்சிடப்பட்ட கல்கத்தா நகரிலும் கூட இப்பத்திரிகை நுழையக்கூடாதென்று தடைவிதித்தது.



மௌலானா முகம்மது அலி அவர்கள் 1911 - இல் காம்ரேட் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்,1913 - இல்ஹம்தர்த் என்ற உருது பத்திரிகையையும் ஆரம்பித்து அடிமை இந்தியாவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமக்களைத் தட்டி எழுப்ப பள்ளி எழுச்சி பாடினார். - எஸ்.எம். அப்துல் காதர்.*

இறுதியாக ஆங்கில அரசு இப்பத்திரிகை ஆசிரியரை 1916 - இல் கைது செய்து பீஹாரில் உள்ள ராஞ்சி சிறையில் அடைத்தது.**
இவ்வாறு தன் பேனா முனையால் பத்திரிகைத் துறையைக் களமாகக் கொண்டு இந்திய சுதந்திரத்திற்குத் தனது ஆரம்பக்கட்டப் பங்களிப்பைத் தந்தவர்கள்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத் !

(* எஸ்.எம்.அப்துல் காதர் இந்திய சுதந்திரத்தின் சந்திரோதயம்,இஸ்மி.மார்ச் 1984.)
(** அபுல் கலாம் ஆசாத், இந்திய விடுதலை வெற்றி ( தமிழாக்கம் : ஏ.ஜி. வெங்கடாச்சாரி) பக்கம் 10.)

எல்லைப்புரத்தில் கால்கோள்


பஞ்சாப் - சிந்து மாகாணங்களின் எல்லைப் புறங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் 'கட்க' என்ற ஆயுதமேந்திய விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் சிறந்து விளங்கியவர்களாவார்கள். எதிரிகளிடம் மோதுவதில் மூர்க்கத்தன்மை உடைய இம்மக்களைச் சாந்த சொரூபிகளாக மாற்றி, அஹிம்ஸை வழித்தடத்தில் நடத்திச் சென்றவர்தான் கான் அப்துல் கஃபார்கான்.

1930 - களில் ஒத்துழையாமை இயக்கத்தை எல்லைப்புற மாகாணங்களில் வலுப்படுத்தினார். அவ்வெல்லைப்புற மாகாணங்களில் சுதந்திரப் போராட்டத்திற்கான கால்கோளை நடத்தியவர் என்ற காரணத்தினால் தான் இவரை எல்லைக்காந்தி என்று தேசாபிமானிகள் அழைத்தனர்;

கான் அப்துல் கஃபார் கானின் சகோதரர் டாக்டர் கான்சாஹிபும் போராட்ட நடவடிக்கைகளில் அவரோடு துணைநின்று பலமுறை சிறைச்சாலைகளைத் தரிசித்தார்.*
(* ஏ.என்.முஹம்மது யூசுப், இந்திய விடுதலைப் பேதராட்ட வீரர்கள்,பக்கம் 241.)

ஜமால் சகோரதரர்கள்


நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டுத் தருகிறேன். இந்து - முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி நீங்களும் ஹாஜி ஜமால் முகம்மதுவும் என்ன முடிவு செய்கிறீர்களோ, அது எனக்குச்சம்மதம். என்று ஆஹாகானிடம் காந்திஜி கூறும் அளவிற்கு, அன்று தமிழகத்தில் செல்வாக்கு படைத்தவராக ஹாஜி ஜமால் முகம்மது விளங்கினார். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றும் அள்ளிக் கொடுத்தும் இவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

சென்னை மாகாண கிலாபத் மாநாடு நிறைவேற்றிய முதல் தீர்மானம் : ''அரசால் வழங்கப்படும் கௌரவங்கள்அதிகார சின்னங்கள்,விருதுகள் ஆகியவைகளைப் பெறக்கூடாது. பெற்றவைகளை வாபஸ் செய்யவேண்டும்" என்பதாகும்.



சென்னையில் மௌலானா முகம்மது அலி தலைமையில் நடைபெற்ற சென்னை மாகாண கிலாபத் மாநாட்டிற்கு நிதி திரட்டும் பொறுப்பை ஏற்றவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார். - ம.பொ. சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம்,- முதல் தொகுதி.

இத்தீர்மானத்திற்கு மதிப்பளித்து ஹாஜி ஜமால் முகம்மதுவின் சகோதரர் ஜமால் இபுராஹிம் சாஹிப் தான் வகித்த மிக உயர்ந்த கெளரவ மாஜிஸ்டிரேட் பதவியை 1920 செப்டம்பரில் ராஜினாமா செய்தார். தேச விடுதலைக்காய் - ஆங்கிலேயருக்குத் தங்கள் தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காகத் தங்கள் பதவிகளையும் அந்தஸ்துகளையும் துறந்த இஸ்லாமியர் பலருண்டு.

கள்ளுக்கடை மறியலில் ஒரு மௌலானா


1921 - இல் காந்திஜியின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுக்க கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தலைவர்கள் பலர் இறங்கினர்,நில்க்கோட்டைத் தாலுகா அளவிலான கள்ளுக்கடை ஏலத்தினை ஆங்கில அரசு நடத்தியபோது அதனை எதிர்த்து மிகப்பெரிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி,மட்டப்பாறை வெங்கிடராம ஐயர், பட்டாபி சீதாராமையா ஆகியோருடன் சிறை சென்றவர்தான் மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்.

மதுரை வாசி ஹாஜி முகம்மது
மவுலானா பெயர் மங்குமோ
அவர் மனதிலே துயர் தங்குமோ!
மகிழ்வினோடு சிறையில் வாழும்
மாட்சி தன்னை எண்ணுவீர்
தினம் வாழ்த்தி வந்தனை பண்ணுவீர்
- கம்பம் பீர் முகம்மது பாவலர்.

கள்ளுக் கடை மறியல் வழக்கில் கைதான இத்தலைவர்கள் மீது அவ்வழக்கினைப்பதிவு செய்யாமல்கொள்ளை வழக்கினை ஆங்கில அரசு போட்டது. இவ்வழக்கில் சிறைவாசம் அனுபவித்த மதுரை மௌலானா1921 - இல் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் அரசை பகிரங்கமாக விமர்சித்துப் பேசியதற்காக இரண்டாண்டுகள் வேலூர் சிறையில் வாடினார்.

முத்துராலிங்கத் தேவருடன் இணைந்து மதுரைப் பகுதிகளில் 1937 காங்கிரஸ் மாநாடு முதல் பல சுதந்திரப் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1942 - இல் மதுரை மாநகராட்சித் தலைவராக இருந்த பெருமையும் மௌலானாவுக்கு உண்டு.*
(* ச.கா.அமீர் பாட்சா,'இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு',குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.)

செல்வாக்கு மிக்க செல்வந்தர்


காந்திஜி ஆரம்பித்த கள்ளுக் கடை மறியல் போராட்டம் முதலான அனைத்து தேசிய இயக்கங்களும் பெரியகுளம் தாலுகா பகுதிகளிலும் உத்தமபாளையம் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறுவதற்கான பொருளாதாரப் பிண்ணனியின் நாயகராக உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர் திகழ்ந்தார்.

சுதேசி இயக்கத்தை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மக்கள் சந்திப்பு,குறு நாடகங்கள்பொதுக்கூட்டங்கள் வாயிலாக முன்னெடுத்துச்சென்றார். சுதேசி இயக்கத்தின் எழுச்சியை வீழ்த்துவதற்காக கம்பம் பள்ளத்தாக்கின் முக்கிய ஊர்களில் கதர் விற்பனையை ஆங்கில அரசு தடை செய்தது. இதனால் சுதேசி இயக்கம் அப்பகுதிகளில் துவண்டுவிடாமல் காக்க தானே ஒரு கதர் விற்பனை நிலையத்தை உத்தமபாளையத்தில் துவக்கினார். பூனாவிலிருந்து கதர் ஆடைகளைத் தருவித்து, மக்களுக்குத் தடையின்றி கதர் துணி கிடைக்க அரசின் தடையை மீறி வழிவகுத்தார்.



''கிறுக்கனுங்க கூடக் கதருடை கண்டால் கிழித்திடாப் பாளையத்தில்..."

- என்று கவிஞர் நாஞ்சில் ஆரிது புகழும் உத்தமபாளையத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த தேசியவாதி 'கேசியம்'
என்ற கா.சி. முகம்மது இஸ்மாயில் ஆவார். தனிநபர் சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றதற்காக ஆங்கில
அரசு இவருக்கு 500 ரூபாய் அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்கியது. தேச விடுதலைக்காக மதுரை
சிறையிலும் பின்னர் அலிப்பூர் சிறையிலும் வாடினார்.

திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் இயக்குநர் ஏ.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரின் வேண்டுதலில் 11-09-1922 -இல் பெரியகுளம் தாலுகா அளவிலான காங்கிரஸ் மாநாட்டினை நடத்தும் முழுப் பொறுப்பினையும் தன் சொந்த செலவில் ஏற்றார்.

சுதந்திரப் போராட்ட முன்னணித் தலைவர் சேலம் பி.வரதராஜுலு நாயுடு அம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். அவர் தன் தலைமை உரையை ஆற்றுவதற்கு முன்,காவல்துறை அதிகாரி ஒருவர் மேடையில் வந்து ஒரு காகிதத்தை வரதராஜுலு நாயுடுவிடம் அளிக்கிறார். அதில் ''இம்மாநாட்டில் தாங்கள் உரை நிகழ்த்தினால் கைது செய்யப்படுவீர்கள்!" என்ற கைது நடவடிக்கையின் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. காவல் துறையின் எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் வரதராஜுலு நாயுடு தலைமை உரை நிகழ்த்தினார்.

கிலாபத் இயக்கத்தை முடக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆங்கில அரசு நடந்து கொண்ட மிருக வெறியாடல்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

'பேசினால் கைது செய்வோம்!' என்று எச்சரித்த காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்காமல் கைகட்டி நினறனர். ரி... பேசி முடித்த பின்னராவது கைது செய்தார்களா? இல்லை. மாநாட்டு பந்தலில் மட்டுமல்ல உத்தமபாளையம்  வட்டாரத்திற்குள் வரதராஜுலு நாயுடுவைக் கைது செய்யும் துணிச்சல் ஆங்கில அரசின் காவல்துறைக்கு வரவில்லை. உத்தமபாளையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டியில் வரதராஜுலு நாயுடுவின் காரை வழிமறித்து அவரைக் கைது செய்கின்றனர். இதன் பின் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஏழரை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.*
மாநாட்டில் பேசக்கூடாது என்று எச்சரித்தும் பேசியவரைக் காவல்துறையினர் உத்தமபாளையம் சுற்றுவட்டாரத்திற்குள் ஏன் கைது செய்யவில்லை என்றால்,அது ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பகுதியில் பெற்றிருந்த செல்வாக்கினால்தான். கருத்த ராவுத்தர் ஏற்பாடு என்பதால் கால்துறை கூட கைது நடவடிக்கைக்குப்பயந்தது.

தன் கொடையாலும் தேசிய நடவடிக்கையாலும் உத்தமபாளையம் பகுதிகளில் சுதந்திர இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற அப்பெருமகனின் தியாகங்கள் போற்றுதற்குரியனவாகும்.

எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாயத் திகழவேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்.
அனைவரையும் படைத்த இறைவனின்
பக்கம் நம் அனைவரின்
முகமும் திரும்பவேண்டும்.


(* M.Howth Mohideen,Kajee karutha Rowther- A Study, 1990, PP.54-57.)


அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். கேரளாவில் மரக்கலங்கள் மூலம் வாணிபம் செய்யும் முஸ்லிம்கள்  'மரக்கலாயர்கள்' எனப்பட்டனர். இதுதான் மருவி பின்னாளில் 'மரைக்காயர்கள்' என்றானது..! ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்தபோர்ச்சுகீசியரை விரட்டியடிக்க தமது சகாக்களுடன் கடற்போர் பல செய்த 'குஞ்சாலி மரைக்காயர்' தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத்தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் இவரை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

யூசுப் கான் சாஹிபு (மருதநாயகம்)


ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர் களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்றுதூக்கிலிடப்பட்டனர்.

முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப் பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார்.இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான் அயோத்தி மன்னன் .

ஜாபர் அலி 

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில்ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிட ப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மிர் நிசார் அலி & ரசூல்1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலி டப்பட்டார்.

டாக்டர் சைபுதீன் கிச்சுலு

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

வக்கீல் மக்பூல் மாமூத்

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

முஹம்மது அக்ரம் இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் 

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துமகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் 

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார்.அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் 

ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர்.  

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்
 

இவர் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
கம்பம் பீர்முஹம்மது பாவலர்
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் -கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
தமிழக கதர் இயக்கம்

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி


கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

சிலையை உடைத்த சீலர்ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியாஇவன் சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

சிங்கை சிங்கம் காசிம் இஸ்மாயில் மன்சூர்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915-ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இராணுவ முகாமில் புரட்சி 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்திரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மாப்பிளா மார்கள் போராட்டம்: 
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!) காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

இந்திய விடுதலைப் போரில் பள்ளிவாசல் உலமாக்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான். 

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு  வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி  1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்­லிம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

5. சுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்
டில்லி சக்கரவர்த்தி பகதுர்ஷாவின் பிரதான சமஸ்தா கவிவாணர் தாமே ஒரு தேசிய கீதத்தை இயற்றினார். அந்த கீதத்தை அப்போது பாடாதவர்களே இல்லை எனலாம். பொது வைபவங்கள் எல்லாவற்றிலும் அதைப் பாட வேண்டும் என்று டில்லி சக்கரவர்த்தியே நேரில் கட்டளைப் பிறப்பித்தார். அந்த கீதமானது இந்தியர்களின் பண்டைய வீரச் செயல்களை விளக்கியதுடன்,தற்போதைய வீழ்ச்சியையும் கேட்பவர் மனம் உருகும்படி சித்தரித்தது. வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம் 63.


எறிந்த கல் ஏலம் போனது


குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில் காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம் முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது. மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர். ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார்.

இக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று: மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல். காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட வேண்டிய காலம் தொலைவில் இல்லை: அண்மையிலேயுள்ளது. 'விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்' – என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது?

- என்று உணர்ச்சி பொங்க பேசியபின் அக்கல்லை ஏலத்திற்கு விட்டார். கருங்கல் கனத்த பொருளைத் தந்தது. அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின் போராளிகளை வழிநடத்தியவர்கள்,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடுசிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான். இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.

புவலரின் பேச்சாற்றல் போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது. அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில் ஒரு பெருந் தேசிய கூட்டம்,வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார். பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :

கூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை, அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்: இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம், அதற்கு மில் துணி எடுப்பர். எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும் பிண ஆடையாக மில் துணியையும் அணிவர். எனவே நீங்களெல்லாம் மணமக்களா? பிண மக்களா? மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்!

- என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்டு பேச்சை முடித்தார். உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும், அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர். சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.

நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள் ஒருமுறை வகுப்பில் கூறினார் :

இரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார் நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு, தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டுஉள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.

இந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில் சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

''அறியாத இளம் பருவத்தே எனக்கு அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்" - என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. டராஜன் அவர்களும்: ''1937 - ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில் பாவலர் பேசிய வீர முழக்கத்தில் ழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்" -

என்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும் கூறியுள்ள சாட்சியங்கள்,ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.

பா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள் பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர். 
'திலக் சுயராஜ் நிதி' – க்காக தெருத்தெருவாகப் பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.

காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆரம்பித்தவுடன், ''கள்ளுக் குடியாதே ஐயா" – என்ற இசைப் பாடலை எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.

கம்பம் பீர்முகம்மது பாவலர்


ஆண்டிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பதவி. குற்றப்பிரிவு என ஒதுக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த சிலரைத் தண்டிக்கும்படி வெள்ளைக்கார மேலதிகாரி உத்தரவிட்டார். குற்றம் ஏதும் செய்யாதவர்களைஅப்பாவி இந்தியர்களை ஓர் இந்தியன் தண்டிக்கமாடடான் என்று கூறி மறுக்கிறார். மேலதிகாரி கோபிக்கிறார்.

உடனே தனது போலீஸ் சீருடையை அங்கேயே கழற்றி எறிந்து,வேலையை உதறித் தள்ளிவிட்டுப் புறப்படுகிறார். அவர்தான் கம்பம் பீர்முகம்மது பாவலர்.

கலெக்டரும் கடவுளல்ல
அடிமைப்போலீஸ்
கான்ஸ்டபிள் எமனுமல்ல
அல்லா...யாஅல்லா
இத்தொல்லைகள்
அகலுவது எந்நாளோ?
இப்பொல்லாத பேய்களெல்லாம்
இங்கிலாந்து
போவதும் எந்நாளோ?
-என்று தேசவிடுதலைக்காய் வேதனை வரிகளை வடித்தவர்.

1923 -இல் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தின்போது, கம்பத்தில் ஜவுளி வியாபாரிகளை எல்லாம் கூட்டி 'அந்நியத் துணிகளைத் தாங்கள் யாரும் விற்பதில்லை' என்று அவர்களிடம் சத்தியம் வாங்கும் வரையில் சத்தியாக்கிரகம் நடத்தி சாதித்தார்.

சாந்தமும் பொறுமையும் தனி வடிவாகி
மாந்தரை ஆட்கொள்ள வந்த விவேகி
- என்று காந்திஜி பற்றி இவர் எழுதிய பாடல் அன்று முழங்காத மேடைகளில்லை.

தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கைதாகி அலிப்பூர் சிறையில் வாடினார். இவரது 13 கையெழுத்துப் பிரதிகளைத் தேசத்துரோக புத்தகங்கள் என்று பிரிடடீஸ் சர்க்கார் பறிமுதல் செய்து தீயிட்டுக் கொளுத்தினர். திண்டுக்கல்மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மூன்று ஆண்டுகள் பிரச்சாரத்திற்காய் நுழையக் கூடாது என்றும் பிரிட்டீஸ் அரசு இவருக்குத் தடை விதித்திருந்தது. ஆனால் பாவலரோ சரபோஜி உடையில் அந்நகர்களுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து பிரச்சாரம் செய்தார்.



பீர்முகம்மது அண்ணல் செய்யும்
பிரசங்கம் செவிக்கு அமிர்தம்
ஊர்க்கு உழைக்க இவ்வுலகில்
உடலெடுத்த பூங்குமதம் !
......
ஒத்துழையாமை யெனும் தத்துவமதை
இத்தரையில் நடத்திய தரன்
காசினியோர் புகழும் கம்பம்நகர்தனிலே
களிப்புடன் வசிக்கும் யோகன் !
...
தொடர்ந்து இவர் மேடையில் பேச்கூடாது என்று 'வாய்ப்பூட்டுச் சட்டம்' போட்டனர். வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மேடை ஏறி, சைகை மூலம் நடித்துப் பிரச்சாரம் செய்தார். பாமஞ்
சரி,காந்தி மல்லிகைமுத்தண்ணா போன்ற இவரது நூல்களிலும் சுதந்திர எழுச்சி உண்டு.

இவரது சுதந்திரப் போராட்டப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, உத்தமபாளையம் கா.சி. முகம்மது இஸ்மாயில் போன்றோர் போராட்டங்களில் குதித்தனர். போடி கான்முகம்மது புலவர் போன்றோர் சுதந்திர கீதங்களைப் பாடினர்.

வீதியில் ஒரு பாவலர்


1919 முதல் 1930 வரை மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டியவா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர். இஸ்லாமிப் பெண்கள் வீட்டைவிட்டு வெளிவராத ஒரு காகட்டத்தில் தேசத்திற்காய் ஒரு பெண் வீதி உலா வந்தது புரட்சிதான். 'தேச வினியோக சிந்து' – போன்ற தேசிய கீதங்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். கிலாபத் இயக்கத்திலும், கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டு 1930 – ஆம் ஆண்டில் இருமுறை சிறை சென்றுள்ளார்.


வில்லுப்பாட்டில் ஒரு பாவலர்

ஆசுகவியாகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் வில்லுப்பாட்டுக்களால் தேச விடுதலை உணர்வுகளை வளர்த்தார்.கிலாபத் இயக்கத்திலும் பங்கேற்றார்.

காமராஜருடன் ஒரு பாவலர்

1922 - இல் காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்திற்காக காமராஜர் மக்கள் மத்தியில் ஆதரவுதிரட்டி ஊர் ஊராகச் சென்றபோது, அவரோடு சென்றவர் பாவலர் விருதுநகர் அப்துல் ரகுமான்பிரச்சாரக்கூட்டங்கள் ஆரம்பிக்கும் முன் அப்துல் ரகுமான் சுதந்திர கீதங்களைப் பாடுவார். மக்கள் எழுச்சியுடன் கூடுவர். பாடல் உச்சத்திற்குச் செல்லும் போது, காமராஜர் 'மகாத்மா காந்திக்கு' - என்று ஓங்காலக் குரல் கொடுக்க,மக்கள் 'ஜே!' எனக் கோசம் எழுப்புவர்.

நாடக மேடையில் நம் பாவலர்கள்

நாடகமேடைகளில் சுதந்திர கீதங்களைத் தனிப்பாடல்களாக இணைத்து விஸ்வநாததாஸ், செங்கோட்டை கிட்டப்பா,கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. இதனால் பலமுறை ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு இவர் ஆளானதுண்டு.

மதுரை கொல்லன்பட்டரையைச் சார்ந்த அலியார் என்பவர் 'சுதந்திர தாகம்', 'தாய்வீடு', 'தாய்நாடு', 'தியாக உள்ளம்', 'நவ இந்தியா' போன்ற தேசபக்தி நாடகங்களை மதுரை மாவட்டம் முழுவதும் நடத்தியுள்ளார்.

பர்மாவிலிருந்து மதுரை வந்து குடியேறிய அப்துல் ரஹ்மான் என்பவரும் பலதேசபக்தி நாடகங்களில் பாடி நடித்துள்ளார்.

'சுதந்திர முரசு' 'விலாவர் ஜரினா' போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.

இன்னும் எத்தனை பேரோ?

1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று 'ஆத்திரம் கொள்' என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். 1946 - இல் வெளியான இவரது 'ஒளி' என்ற கவிதைத் தொகுப்பில் பல சுதந்திர கீதங்களைக் காணலாம்.

தோள்கள் விம்முது தசையுந் துடிக்குது
சுதந்திரம் என்றவுடன் -
கோலைவாள் கொண்டு தாக்கினாற் போன்றே இருக்குது
அடிமையென நினைத்தால் -
இதை ஆள்பவன் சிந்திக்க வீணாய் மறுக்கிறான்
அதிகாரத் தன்மையினால் -
புவி ஆள்வதற்காக நாம் ஆத்திரம் கொண்டிடல்
அறமும் முறையுமாம்!
- என்று போராட்ட உணர்வுகளைத் தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.
ஆங்கில ஆட்சியே – உன்
அந்திமக் காலம் நெருங்கிவிட்டது.

- என்று வேலூர் நகரின் வீதிகளில் முஸ்லிம் பக்கிரி ஒருவர் ஓயாது பாடிக்கொண்டே திரிவாராம். இப்படி இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்கள் புலமைத்திறனை,பேச்சாற்றலை, நடிப்பாற்றலை அர்ப்பணித்த விலாசம் வெளிப்படுத்தாத முஸ்லிம் பாவலர்கள் இன்னும் எத்தனை பேரோ?


6. ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்

கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லதமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* - INA கேப்டன் ஷா

நவாஸ்கான். ஸேவக் கி ஹிந்த்


1943 ஜுலை 2 - ஆம் தேதி சிங்கப்பூரில் 'ஆஸாத் ஹிந்த் சர்க்கார்' (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: 'ஆசாத் ஹிந்த் பவுச்' என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார்.

அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது, "தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இநிதிய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்'' - என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, "எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்'' என்று அறிவித்தனர்.

இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! - என்று பேச, கூட்டத்திலிரந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?



...இந்திய தேச பக்தர்கள் பலர் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு அர்ப்பணம்செய்தனர்.ஸ்ரீஹபீப், ஸ்ரீகன்னா முதலிய பிரமுகர்கள் சுதந்திரப் போருக்கு உதவியாக லட்சக்கணக்கான தொகையை வாரி வழங்கினர். சில நாட்களில் இந்திய தேசிய வங்கியில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. -ஜெயமணி சுப்பிரமணியம்.*

"ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்''
 - என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன.

அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான வள்ளல் முஹம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர்தான் ஹிந்த் கே சேவக்  (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.**



இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். (* ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181) - (** கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.)

நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம்
பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் 'இளமையின் கனவு', 'நேர்வழி' ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. ண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த 'இந்திய சுதந்திர லீக்' அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 - இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.


இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 - இல் நேதாஜின் 47 - வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*

23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. - அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இனறளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?

(* அமீர் ஹம்சா, 'நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்' , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:


பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம் ô
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்


 






மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்


தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள்என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பட்டுள்ளார்.*
அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?
(* நிஜாமுத்தீன் ஜமாலி, 'ஒரு துணி வியாபாரியின் கதை,' சிந்தனைச்சரம் நவம்பர் 1997., பக்கம்32-33.)

வ.உ.சி - யின் நேசர்


உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோம்பை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது. வ.உ.சி - யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப்
வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர். 

1905 - இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.

1907 - இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.


1908 - இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார்,

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்
நூ
லோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ!

- என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப்
பகிர்ந்திருக்கிறார்.



1908 - இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்... முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். - தனது 'சுயசரிதை' யில் வ.உ.சி. 
வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். ஆந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான்.* முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல.
(* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்


 


இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார்.

ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். திக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர்(பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- என்று 20-10-1906 - இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது 'சுதேசியத்தின் வெற்றி' நூலில்
எடுத்தாண்டுள்ளார்.*


இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் 'கப்பல் வாங்கித்தந்த தமிழன்'ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)


இறுதி வார்த்தைகள்...


1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி - க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :

காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!


என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.

1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது. 

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !*


* ''I Want to go back to my country''. He said in a loud voice. ''If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.''
- Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் 'அல்-அக்ஸா' பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :

இறைவா...
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !
சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !


மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான 'சுதந்திர இந்தியா' மலர்ந்து விட்டது. ஆனால் தேசத்தின்விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை - தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது. எனவே மௌலானா கேட்ட ''சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா'' ! என்ற பிரார்த்தனை... மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இன்று பொன்விழா காணும் சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் பிரார்த்தனையும் - ஜீவத் துடிப்பும் :


எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாய் திகழ வேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்
அதோடு இந்த மண்ணில்
இஸ்லாமியர் அமைதியாக வாழவிடப்பட வேண்டும் ... என்பதே !


ன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 

ஜாவேரி குடும்பமும் காந்தியும் சுதந்திர போராட்டமும்!.

மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்..

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.

அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சர்ச்சைகள்.. அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தரை பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.

போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.

‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்துல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.

அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.

எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.

1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.

1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்களை பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)

அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியானது. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.

முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.

சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.

உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.

இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந்து கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.

இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.

இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.

‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
"KUMUDAM REPORTER" 12.07.07

http://www.hindu.com/2004/04/03/stories/2004040305100500.html

இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே! 
  

ஆக்கம் : 
சகோ. மு.அப்துல் சமது, பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். 
சகோ. முத்துப்பேட்டையார் 
சகோ. சுவனப்பிரியன் 
சகோ.அப்துல்லா 
சகோ.யூசுப் கான்   



துணை நின்றன...


1. Agarwal,R.C; Costitutional Development of India and National Movement, S.Chand & Company P. LTD; New Delhi,1986.
2. Grover,B.L;Grover.S; A New Look at Modern Indian History, S.Chand & Company P.LTD, New Delhi, 1993.
3. Kasim Rizwi: The Great Bahadur Sha Jaffer, Directprate of Advertising and Visual Publicity,Ministry of I & B Publication,1983.
4. Pande,B.N; Islam and Indian Culture Part-I; Khuda Baksh Memorial Annual Lecture,Patna,1985.
5. Rajjayyan K ;Sonth Indian Rebellion The First War of Indenpence 1800-1801, Rao & Raghavan Publishers,Mysore,1971.
6. Rudrangshu Mukherjee, Awadh in Revolt 1857-1858- A study of Popular Resistence, Oxford University Prees,Delhi,1984.
7. Shan Muhammad, Freedom Movement in India - The Role of Ali Brothers ; Associated Pubilshing House, New Delhi, 1979.
8. Taunk, B.M ; Non - Co - operation Movement in Indian Politics 1919 - 1924 - A Historical Study, Oxford Univ Prees,Delhi,1978.
9. Venkatesan, G; History of Freedom Struggle in India, Rainbow Publications, Coimbatore,1985.
10. Howdh Mohidenn, M; Hajee Karutha Rowther - A study, 1990.
11. அபுல்கலாம் ஆசாத், இந்திய விடுதலை வெற்றி (தமிழாக்கம் : ஏ.ஜி. வெங்கடாச்சாரி),ஓரியண்ட் வாங்மன்ஸ், சென்னை, 1961.
12. அருணாசலம், கே., ஜெய்ஹிந்த், புத்தக நிலையம்,ராயவரம்,1946 .
13. காஸிம் ரிஸ்வி, இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர், இந்திய தகவல் தொடர்புத் துறை வெளியீட, 1983.
14. காமாட்சிபிள்ளை , ப: இந்து தேசாபிமானிகள் இனிய ரமணிய கீதம், சுதேசி வெளியீடு, மதுரை, 1926.
15. செய்குத்தம்பி(பதிப்பாசிரியர்),சதாவதானி செய்குதம்பிப் பாவலர், பாவலர் பதிப்பகம், சென்னை 1987.
16. திலான், தி: விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், சுஹைனா பதிப்பகம், திருநெல்வேலி, 1994.
17. முஹம்மது யூசப், ஏ.என்., இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள், நூருல் இஸ்லாம் பதிப்பகம் - சென்னை, 1969.
18. வீரசாவர்க்கர், எரிமலை( தமிழ்ப்பதிப்பு)------, சென்னை, 1946.
19. ஜலஜா சக்திதாசன், திப்புசுல்தான் ஒரு தமவெறியரா? நுpத்தியானந்த ஜோதி நிலையம், சென்னை, 1988.
20. ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் - இரண்டாம் பாகம், திருமகள் நிலையம், சென்னை, 1979.
21. ஷேக்தாவூத், A: இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு, காஜயார் புக் டிப்போ, தஞ்சாவூர்,1990.
22. அமீர் ஹம்சா, நேதாஜியின் மாலைக்கு ரூ 5 இலட்சம், தினமணி சுதந்திப் பொன்விழா மலர், ஆகஸ்ட் - 1997.
23. அண்ணாமலை, மா.சு: 'சும்மா வரவில்லை சுதந்திரம்' , தினமணி கதிர், 4.8.1996.
24. இஸ்மி, மார்ச் 1984: மே 1984.
25. குர்ஆனின் குரல், மார்ச் 1998.
26. சிந்தனைச்சரம், நவம்பர், 1997, அக்டோபர் 1997.
27. மதிநா, டிசம்பர் 1986, ஜனவரி 1987.
28. தினமணி, 29.4.1997.


நன்றி :-

http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters1.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters2.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters3.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters4.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters5.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters6.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters7.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters8.htm
http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters9.htm
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9205:2010-06-03-17-34-01&catid=26:india&Itemid=135
http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_925.html
http://salemexpress.blogspot.com/2009/11/blog-post_03.html
http://www.tamilislamicaudio.com/mobile/mob_articles_detail.asp?aid=8 


பிற்சேர்க்கை :-
இப்படியாக  நாட்டு விடுதலைக்காக போராடிய முஸ்லிம்கள்... 
சுதந்திர நாட்டின் தேசிய கொடியையும் வடிவமைத்தார்கள்..! 
அது பற்றிய எனது அந்த தனி இடுகையை,  இப்பதிவில்  சேர்த்துள்ளேன் சகோ..!


தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்...




இன்று (18 - மார்ச்) உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 

( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )


இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)


சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 

1886 இல், இ.தே.கா.-இன் இரண்டாம் தலைவர்,  பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 

இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 


மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.


அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!

உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி, இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html  (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக