சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயது நபர், 11 நாட்களில் முற்றிலுமாக நோயிலிருந்து குணமடைந்து வந்துள்ளார்.
லண்டனை சேர்ந்த ரிச்சர்டு டவுடி(வயது 59), சில நாட்களுக்கு முன் தன் உடல்நிலை குறித்த பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
மேலும் குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால் சர்க்கரையின் அளவை குறைக்கலாம் என அறிவுரையும் வழங்கினார்.
அப்போது குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் என நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
அவர் வகுத்த அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார்.
இதனையடுத்து வழக்கமான உணவுகளுக்கு பதிலாக 600 கலோரிகளை மட்டுமே உடைய பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும் 200 கலோரிகளை உடைய பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார்.
11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மீண்டும் நிலைப்படுத்தினார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ரிச்சர்டு, முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும் என மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக